முதியவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் சமூக உறவுகளை வலுப்படுத்தவும் கலை ஒரு சிறந்த ஊடகம்

1 ஜூன் 2026, 8:46 AM
முதியவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் சமூக உறவுகளை வலுப்படுத்தவும் கலை ஒரு சிறந்த ஊடகம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 1, கலை நடவடிக்கைகள் முதியவர்களுக்கு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, மாறாக அது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்து-வதற்கும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப் பட்ட உணர்வைக் குறைப்பதற்குமான ஒரு களமாக மாறியுள்ளது.

இந்தத் தேவையை உணர்ந்து, புக்கிட் காசிங் சட்டமன்றம் (DUN), முதியவர்களுக்காக பிரத்தியேகமாக 'நாகோமி பேஸ்டல்' கலைப் பட்டறையை (Bengkel Seni Pastel Nagomi) கடந்த மே 23-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாநகர மன்ற சமூக மண்டபத்தில் ஏற்பாடு செய்தது.

எளிமையான மற்றும் நிதானமான கலை நடவடிக்கைகளின் மூலம் முதியவர்கள் சுறுசுறுப்பாக இருக்கவும், சமூகத்தினருடன் கலந்துரையாடவும் இந்தப் பட்டறை உதவுவதாக அதன் நிர்வாகி சோமேஸ்வரன் சிவனாதன் தெரிவித்தார்.

"முதியவர்கள் வீட்டில் இருப்பதைப் போன்ற வசதியான உணர்வை ஏற்படுத்துவதோடு, அதே வேளையில் அவர்களை வீட்டை விட்டு வெளியே வர ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள விரும்புகிறோம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

50-க்கும் மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்ட இந்தப் பட்டறையை ஏற்பாடு செய்வதற்கான யோசனை, இதற்கு முன்னர் புக்கிட் காசிங் தொகுதியில் மலேசிய சைகை மொழி (BIM) வகுப்பைத் தாம் நடத்திய பிறகு தோன்றியதாக அவர் கூறினார்.

இத்திட்டத்தை தடையின்றி நடத்தும் நோக்கில், பயன்படுத்தப்படும் பொருட்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்
பட்டதால், இந்த ஏற்பாட்டிற்கான செலவு சுமார் RM300 என மதிப்பிடப் பட்டுள்ளதாக சோமேஸ்வரன் மேலும் கூறினார்.

இதற்கிடையே, கலை சமூகத்தை ஒன்றிணைப்பதோடு, ஒரு நிதானமான சூழலில் சமூகத் தொடர்பை ஊக்குவிப்பதாக புக்கிட் காசிங் சட்டமன்ற அலுவலகத்தின் தொழில்துறை பயிற்சிப் பணியாளர் நிவி ரஞ்சினாத் முனியாண்டி கூறினார்.

"திறமையோ அல்லது அனுபவமோ இல்லாவிட்டாலும், கலையை வயது வித்தியாசமின்றி அனைவரும் ரசிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், அடிப்படையில் கலை என்பது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும்," என்று அவர் விளக்கினார்.

குடும்ப உறுப்பினர்கள் முதியவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதால், இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் உளவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர் கருத்து தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.