ஷா ஆலம், ஜூன் 1: காஜாங் சட்டமன்ற தொகுதி மக்கள் சேவை மையம், ‘கேம்பென் காஜாங் பெர்சே, காஜாங் திஹாத்திகூ’ (KBKD) எனப்படும் தூய்மைப் பிரச்சாரத்தின் வாயிலாகச் சிறுகடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிறப்பு 'ஏப்ரான்'களை விநியோகிக்கவுள்ளது.
இந்த முன்னெடுப்பு, தூய்மை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, வியாபாரிகளின் நற்பெயரை வலுப்படுத்தவும், மிகவும் முறையான வணிகச் சூழலை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் கூறினார்.
நகரத்தின் தூய்மையையும் நற்பெயரையும் கூட்டாகப் பராமரிக்கும் காஜாங்கைச் சுற்றியுள்ள சிறுகடை வியாபாரிகள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு ஆதரவு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக இந்த ஏப்ரான்கள் விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்வதற்குத் தூய்மை அம்சம் முக்கியமானது மட்டுமின்றி, வணிகம் மற்றும் ஒட்டு மொத்த நகரத்தின் நேர்மறையான பிம்பத்தை உருவாக்குவதில் அது பெரும் பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"காஜாங் நகரத்தின் தூய்மையையும் நற் பெயரையும் இணைந்து பாதுகாக்கும் வியாபாரிகள், உணவக உரிமையாளர்களுக்கும் ஆதரவு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக இந்த ஏப்ரான் விநியோகிக்கப்படும்," என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
நகரத்தின் தூய்மைத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் வியாபாரிகளுக்கும் சமூகத்திற்கும் இடையிலான கூட்டு அர்ப்பணிப்பின் அடையாளமாக இந்த ஏப்ரான் விநியோகம் அமையும் என்று அவர் விளக்கினார்.
"ஒவ்வொரு நாளும் பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தரப்பினராக வியாபாரிகள் இருப்பதால், இந்த முன்னெடுப்பில் அவர்களின் ஈடுபாடு மிகவும் முக்கியமானது," என்று டேவிட் மேலும் கூறினார்.
இந்த முயற்சி வியாபாரிகளின் தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, உணவுத் துறை வியாபாரிகளிடையே நிலையான தூய்மைப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.
தூய்மையைப் பேணும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்காகவும், காஜாங் தொடர்ந்து தூய்மையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதி செய்வதில் கூட்டுப் பொறுப்பை ஊக்குவிப்பதற்காகவும் இந்த KBKD பிரச்சாரம் செயல்படுத்தப்படுகிறது என்றார் அவர்.
தூய்மைக் கலாச்சாரம் தொடர்ந்து அன்றாடப் பழக்கமாக மாறுவதற்கு, இந்தச் பிரச்சாரத்திற்கு வியாபாரிகள், சிறுகடைக்காரர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
காஜாங் தூய்மைப் பிரச்சாரத்தில் வியாபாரிகளின் நற்பெயரை மேம்படுத்த சிறப்பு 'ஏப்ரான்' விநியோகம்
1 ஜூன் 2026, 6:24 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




