கிரிப்டோ முதலீட்டு மோசடியில் சிக்கி தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் ரிம 1.5 மில்லியன் இழப்பு

1 ஜூன் 2026, 3:08 AM
கிரிப்டோ முதலீட்டு மோசடியில் சிக்கி தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் ரிம 1.5 மில்லியன் இழப்பு

ஷா ஆலம், ஜூன் 1: சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட கிரிப்டோகரன்சி (cryptocurrency) முதலீட்டு மோசடியில் சிக்கி, தகவல் தொழில்நுட்ப (IT) ஆலோசகர் ஒருவர் சுமார் ரிம 1.5 மில்லியன் பணத்தை இழந்துள்ளார்.

63 வயதான அந்த நபர், பாராட் டாயா (Barat Daya) மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 2023-இல், அதிக லாபம் தருவதாகக் கூறி சமூக ஊடகங்களில் வந்த கிரிப்டோகரன்சி முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்து அந்த நபர் ஈர்க்கப்
பட்டுள்ளார்.

"அதில் ஆர்வம் காட்டிய அவர், விளம்பரத்தில் இருந்த இணைப்பை அழுத்தி, வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் சந்தேக நபரைத் தொடர்பு கொண்டுள்ளார்," என்று ஹரியான் மெட்ரோவிடம் வெளியிட்ட அறிக்கையில் டத்தோ அஸிஸி கூறினார்.

அதன்பின்னர், அமெரிக்க டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி வர்த்தக முதலீட்டை அந்த நபருக்கு அறிமுகப்படுத்திய சந்தேக நபர், முதலீடு தொடர்பான விளக்கங்களை அளிக்கும் வாட்ஸ்அப் குழு ஒன்றிலும் அவரைச் சேர்த்துள்ளார்.

பின்னர், முதலீட்டுச் செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்யுமாறு அந்த நபர் அறிவுறுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து, சந்தேக நபர் வழங்கிய சில வங்கிக் கணக்குகளுக்கு அவர் பணப் பரிமாற்றம் செய்யத் தொடங்கியுள்ளார்.

"மார்ச் 2024 முதல் செப்டம்பர் 2024 வரை, சந்தேக நபர் வழங்கிய ஆறு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு அந்த நபர் ஒன்பது முறை பணப் பரிமாற்றம் செய்துள்ளார். இதன் மொத்த மதிப்பு ரிம 1.49 மில்லியனுக்கும் அதிகமாகும்," என்று அவர் மேலும் கூறினார்.

அந்தச் செயலியில் காட்டப்பட்ட லாபத்தையும், தான் முதலீடு செய்த அசல் தொகையையும் தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியாத நிலையில்தான், தான் ஏமாற்றப்
பட்டதை அந்த ஆடவர் உணர்ந்ததாக அஸிஸி குறிப்பிட்டார்.

முதலீடு செய்த பணத்தை இனி திரும்பப் பெற முடியாது என்பதை உணர்ந்த பின்னரே அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், மோசடி குற்றத்துக்கான குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் கீழ் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்து தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.