புத்ராஜெயா, மே 4: நாட்டில் டீசல் விலையைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உரிமம் பெற்ற 19 ஆலைகள் மூலம் B15 பயோ டீசல் உற்பத்தி எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த பயோ டீசல் உற்பத்தி படிப்படியாக மேற்கொள்ளப்படும் எனவ்துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறினார். தொடக்கத்தில் B15 உடன் ஆரம்பித்து, பின்னர் B20 ஆக உயர்த்தப்பட்டு, அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் B50 அளவை எட்டும் திறன் உள்ளது.
"பயோ டீசல் உற்பத்திச் செலவில் கச்சா செம்பனை விலை அழுத்தத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த படிப்படியான அணுகுமுறை செயல்படுத்தப்படுகிறது," என்று அவர் இன்று நடைபெற்ற கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் (KKDW) மே மாதக் கூட்டத்தில் கூறினார்.
கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான அஹ்மத் ஜாஹிட், செம்பனை அடிப்படையிலான பயோ டீசல், நாட்டின் எரிசக்தித் திட்டத்தை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஒரு புதிய ஊக்கியாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
"நாட்டின் விவசாயப் பொருட்களின் வலிமையை கிராமப்புற பொருளாதாரத்தின் எதிர்காலத்துடன் இணைக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது."
"மத்திய திரங்கானு மேம்பாட்டு வாரியம் (கெத்தெங்கா), மற்றும் தெற்கு கிளந்தான் மேம்பாட்டு வாரியம் (கெசெடார்) ஆகியவை இந்த ஆற்றலை தீவிரமாகப் பார்க்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
டீசல் விலையைக் குறைக்க ஜூன் 1 முதல் ‘B15 பயோ டீசல்’ உற்பத்தி தொடக்கம்
4 மே 2026, 7:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
எரிசக்தி நெருக்கடி: மக்களைப் பாதுகாக்கத் தீவிர நடவடிக்கைகளைப் பிரதமர் அன்வார் அறிவித்தார்
Shalini Rajamogun
15 ஏப்ரல் 2026

national
எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க பயோடீசல் பயன்பாட்டை கூட்டரசு அரசாங்கம் பரிசீலித்து வருகிறது
Shalini Rajamogun
15 ஏப்ரல் 2026

national
டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் சரிவு - நிதி அமைச்சு அறிவிப்பு
Shalini Rajamogun
14 மே 2026

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

உங்கள் கருத்து என்ன?




