ஹார்சன்ஸ் (டென்மார்க்): புதன்கிழமை இரவு, ஃபோரம் ஹார்சன்ஸில் நடைபெற்ற சி பிரிவு ஆட்டத்தில் தைவானிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த போதிலும், டென்மார்க் 2026 தோமஸ் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
அடுத்தச் சுற்றுக்கு முன்னேற போட்டியை ஏற்று நடத்தும் அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே தேவைப்பட்ட நிலையில், மிக முக்கியமான தருணத்தில் அதை அவர்கள் சாதித்தனர்.
உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆண்டர்ஸ் அன்டோன்சன், இந்த முக்கியப் பொறுப்பை ஏற்று தனது அணிக்குத் தேவையான அந்த ஒரு புள்ளியைப் பெற்றுத் தந்து நாயகனாகத் திகழ்ந்தார். அவர் 82 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தில், சோவ் தியென் சென்னை 21-14, 13-21, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம், தியென் சென்னுக்கு எதிரான தனது வெற்றி தோல்வி சாதனையை 8-8 என அன்டோன்சன் சமன் செய்தார்.
"இந்த ஆட்டம் மிகவும் அசாதாரணமானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. தியென் சென்னுடன் மோதுவது எப்போதும் கடினமானது. காலிறுதிச் சுற்றுக்கான இடத்தை உறுதி செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் ஆட்டத்திற்குப் பிறகு கூறினார்.
இந்த கடைசி குழுநிலை ஆட்டத்தில், தைவான் டென்மார்க்கிற்கு எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. அதன் முதல் இரட்டையர் ஜோடியான சியு ஹ்சியாங் சியே-வாங் சி-லின், டேனியல் லுண்ட்கார்ட்-மாட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியை 21-7, 22-20 என்ற நேர் செட்களில் தோற்கடித்து நிலையை சமன் செய்தது.
டென்மார்க்கின் இரண்டாவது ஒற்றையர் வீரர் மாக்னஸ் ஜோஹன்னெசன், 2026 ஆம் ஆண்டின் ஆல் இங்கிலாந்து வெற்றியாளரான லின் சுன்-யீயை 21-17, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்து, மீண்டும் டென்மார்க்கை முன்னிலை பெறச் செய்தார்.
தைவானின் லியு குவாங் ஹெங்-யாங் போ-ஹ்சுவான் ஜோடி, கிம் ஆஸ்ட்ரூப்-மத்தியாஸ் கிறிஸ்டியன்சன் ஜோடியை 24-22, 21-17 என்ற நேர் செட்களில் தோற்கடித்து, மீண்டும் ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி ஆட்டத்தில், தைவானின் சி யூ ஜென் மூன்று செட்கள் வரை போராடி, டிட்லேவ் ஜேகர் ஹோல்மை 21-11, 9-21, 27-25 என்ற கணக்கில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், தைவான் 'சி' பிரிவின் வெற்றியாளராகவும், டென்மார்க் இரண்டாம் இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு முன்னேறின.
இதற்கிடையில், சுவீடனுக்கு எதிராக தென்கொரியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்ற போதிலும், குழுநிலை புள்ளிப்பட்டியலில் டென்மார்க்கை முந்துவதற்கு அது போதுமானதாக அமையவில்லை.
மே 3 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த 2026 தோமஸ் கிண்ணப் போட்டியில், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.
டென்மார்க் 2026 தோமஸ் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற ஆண்டர்ஸ் அன்டோன்சன் கைக் கொடுத்தார்
30 ஏப்ரல் 2026, 3:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மலேசியா மாஸ்டர்ஸ் மோசமான ஆட்டத்திற்கு பிறகு BAM-க்கு 'ரீசெட்' தேவை: ஒழுக்கம், மனப்பான்மையில் கவனம்
Pakiya
25 மே 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

sukankini
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் 2026: நாட்டின் மகளிர் இரட்டையர் பெர்லி தான் - எம்.தீனா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
Mavitthran
23 ஜனவரி 2026

sukankini
பேர்லி-தீனா, ஆரோன்-வூய்யிக் இந்திய ஓப்பன் அரையிறுதியில் களமிறங்குகிறார்கள்
Pakiya
17 ஜனவரி 2026

உங்கள் கருத்து என்ன?


