சபாக் பெர்ணம், ஏப்ரல் 25 – தாமான் ஆயர் மானிஸ் பகுதியில் உள்ள ‘ருமா இடாமான் காசே’ மலிவு விலை வீட்டுத் திட்டத்தின் 147 வாடிக்கையாளர்கள் இன்று தங்கள் வீட்டுச் சாவிகளைப் பெற்றனர். இதன்வழி, கைவிடப் பட்ட இத்திட்டத்தினால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்த அவர்களின் நீண்டகாலக் காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தாமான் ஆயர் மானிஸ் மேம்பாட்டுத் திட்டம், மாநில சட்டமன்றத்தில் சிலாங்கூர் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான சிறப்புத் தேர்வுக் குழுவின் (SELCAT) விசாரணைக்குக் கொண்டு வரப்படும் அளவுக்குப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில நிர்வாகத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்ற பிறகு, மக்களின் நலன் கருதி இத்திட்டத்தை உடனடியாக முடிக்க உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
"மக்களைப் பாதிக்கும் கைவிடப்பட்ட திட்டங்களின் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் இந்த நிர்வாகம் உறுதியாக உள்ளது. இன்று, இத்திட்டம் இறுதியாக வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது," என்று ‘ருமா இடாமான் காசே’ வீட்டுச் சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்விற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
"வசதியான, தரமான மற்றும் மலிவு விலையில் வீடுகளைப் பெறுவதை உறுதி செய்வதில் சிலாங்கூர் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது," என்றார் அவர்.
மக்களுக்கு முதல் வீட்டை சொந்தமாக்கும் வாய்ப்பை விரிவுபடுத்தும் முயற்சியில், சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PNSB) மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் நிறுவனம் (MBI) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டதாக அமிருடின் மேலும் தெரிவித்தார்.
25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இத்திட்டத்தில் 147 ஓரடுக்கு மற்றும் இரட்டை மாடி வீடுகளும், 26 ஈரடுக்கு கடைகளும் அடங்கும். இது உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும், விளையாட்டு மைதானம், ஓட்டப் பாதை, தொழுகைக் கூடம் மற்றும் மழலையர் பள்ளி உள்ளிட்ட வசதிகளும் இங்கு ஏற்படுத்தப் பட்டுள்ளன. இது சௌகரியமான மற்றும் வாழத்தகுந்த ஒரு சமூகச் சூழலை உருவாக்கும்.
மக்களின் நலனுக்காக மேலும் பல மலிவு விலை வீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான உத்திப்பூர்வ ஒத்துழைப்பை மாநில அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அமிருடின் ஷாரி உறுதியளித்தார்.
ஒரு தசாப்பமாக காத்திருந்த இடாமான் காசே’ மலிவு விலை வீட்டுத் திட்டத்தின் 147 வாடிக்கையாளர்கள் இன்று வீட்டுச் சாவிகளைப் பெற்றனர்.
25 ஏப்ரல் 2026, 10:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
`PLATS Masuk Bazar` திட்டத்தின் கீழ் RM10 மில்லியன் அளவிலான விற்பனை பதிவு
Shalini Rajamogun
22 மே 2026

selangor
சிலாங்கூர் உணவு பாதுகாப்பு பிரச்சினையை சமாளிக்க ஆஸ்திரேலியாவுடன் ஒத்துழைப்பை ஆராய்கிறது
Pakiya
9 மே 2026

selangor
7,702 இடாமான் சிலாங்கூர் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; 14,081 வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
29 ஏப்ரல் 2026

selangor
ஜே.கே.எம்-க்கு 65,000 ரிங்கிட் மதிப்பிலான உதவிகளை எம்பிஐ அறக்கட்டளை வழங்கியது
Shalini Rajamogun, Farzana Rozaidee
28 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




