ஷா ஆலம், ஏப்ரல் 24: செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சியை எதிர்கொள்ளும் வகையில், சிலாங்கூர் இளைஞர்களின் ஆயத்த நிலையை வலுப்படுத்த, நடைமுறைக்கு ஏற்ற, தொழில்துறையை மையமாகக் கொண்ட மற்றும் எளிதில் அணுகக்கூடிய தொழில்நுட்பத் திறன் பயிற்சிகள் விரிவுபடுத்தப்படுகின்றன.
சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் (STDC) மூலம் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியானது, தற்போதைய தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப தரவு பகுப்பாய்வு, இயந்திர கற்றல் மற்றும் நுண்ணறிவு ஆட்டோமேஷன் போன்ற துறைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று இளைஞர் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
"இளைஞர்கள் வெறும் அடிப்படைக் கருத்துக்களைப் புரிந்துகொள்வதோடு நின்றுவிடாமல், தொழில்துறையில் பயன்படுத்தக்கூடிய உண்மையான தீர்வுகளை உருவாக்கும் திறனைப் பெறுவதற்கு இந்த அணுகுமுறை முக்கியமானது."
"அதே நேரத்தில், AI பூட்கேம்ப், ஹேக்கத்தான் மற்றும் மைக்ரோ-கிரெடென்ஷியல்ஸ் சான்றிதழ் திட்டங்கள் போன்ற தீவிரப் பயிற்சித் திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். இது மிகவும் நெகிழ்வான மற்றும் விரைவான கற்றல் பாதையை வழங்கும்."
"இதுபோன்ற முயற்சிகள், தொழில்நுட்பம் சாராத பின்னணியைக் கொண்ட இளைஞர்களும் பாரம்பரிய கல்வி முறைகளை முழுமையாகச் சாராமல் AI துறையில் நுழைவதற்கு வழிவகுக்கும்," என்று அவர் கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில், தெங்கில் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜமில் சாலே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், AI துறையில் திறமையாளர்களை உருவாக்கும் நோக்கில், STDC தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் உயர்க்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் முகமது நஜ்வான் தெரிவித்தார்.
இந்த ஒத்துழைப்பு, தொழில்துறை பயிற்சி, கூட்டுத் திட்டங்கள் மற்றும் நிஜ உலகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்களுக்கு (real-world problem solving) அதிக வாய்ப்புகளைத் திறக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
"சமூக மட்டத்தில், சிலாங்கூர் இளைஞர் தூதர் (PeBS) போன்ற அமைப்புகள், அடிப்படை பயிலரங்குகள், தொழில்நுட்ப விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தொழில்துறை நிபுணர்களுடனான கலந்துரையாடல் அமர்வுகள் மூலம் AI பற்றிய ஆரம்பகட்ட அறிமுகத்தை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்க முடியும்."
"குறிப்பாக கிராமப்புற அல்லது குறைந்த வருமானம் கொண்ட இளைஞர்களிடையே ஆர்வத்தையும் நம்பிக்கையையும் வளர்ப்பதற்கு இது அவசியம்," என்று அவர் மேலும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் சிலாங்கூர் இளைஞர்கள்: புதிய தொழில்நுட்பப் புரட்சிக்குத் தயாராகும் மாநில அரசு
24 ஏப்ரல் 2026, 9:02 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
தொழில்துறை ஒத்துழைப்புடன் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்வதில் எஸ்டிடிசி பங்காற்றுகிறது
Shalini Rajamogun
28 ஏப்ரல் 2026

national
ஆஸ்திரேலியாவில் பயிலும் சிலாங்கூர் மாணவர்களுக்கு 'AI' உயர்நிலை பயிற்சி - டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி
Shalini Rajamogun, Zareef Muzammil
8 மே 2026

national
தேசிய தரவு மைய பணிக்குழுவில் சிலாங்கூர் இடம்பெற வேண்டும்: மாநில அரசு கோரிக்கை
Shalini Rajamogun, Adam Azman
15 மே 2026

selangor
பெண் தொழில்முனைவோருக்கு உதவ சிலாங்கூர் ஐந்து வழிமுறைகளை முன்வைத்துள்ளது
Shalini Rajamogun, Yasmin Ramlan
29 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




