ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 22 - சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக சுமார் RM11,000 லஞ்சம் கேட்டதாகவும் பெற்றதாகவும் சந்தேகிக்கப்படும் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை பினாங்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது.
30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், பினாங்கு எம்ஏசிசி அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த போது நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கைது செய்யப் பட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
"ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தேக நபர் நவம்பர் 2024 முதல் ஏப்ரல் 2025 வரை இக் குற்றச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது," என்று அந்த வட்டாரம் கூறியது.
"சந்தேக நபர் தனது 'டச் என் கோ' கணக்கிற்கு வங்கிப் பரிவர்த்தனை மூலம் ஏழு முறை மாதாந்திர லஞ்சப் பணத்தைப் பெற்றதாக நம்பப்படுகிறது."
இக்கைது சம்பவத்தை உறுதிப்படுத்திய பினாங்கு எம்ஏசிசி நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் முஸ்தபா கமல் அகமது, எம்ஏசிசி சட்டம் 2009, பிரிவு 16(a)(B)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் படுவதாகத் தெரிவித்தார்.
சட்டவிரோதக் குடியேறிகளைப் பாதுகாத்ததாகப் புகார்: 11,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது
22 ஏப்ரல் 2026, 2:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
எம்ஏசிசி தொடர்பான போலித் தகவல்களைப் பதிவேற்றிய நபர் விசாரணை: அதிகாரிகள் அதிரடி
Pakiya
21 ஏப்ரல் 2026

national
சிறுவர் & இணையப் பாதுகாப்பு: எஸ்கேஎம்எம் (SKMM) 37 கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தியது
Shalini Rajamogun
27 மே 2026

selangor
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய பெண்ணுக்கு அபராதம்
Shalini Rajamogun
19 மே 2026

selangor
சிலாங்கூர் சுல்தானை அவமதித்தது: படத்தைத் திருத்திய நபர் போலி கணக்கைப் பயன்படுத்தியதாக சந்தேகம்
Pakiya
30 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




