தெஹ்ரான், ஏப்ரல் 22: அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்தால், போர்க்களத்தில் ஒரு புதிய உத்தி அல்லது "புதிய துருப்புச்சீட்டை" வெளியிட தனது நாடு தயாராக இருப்பதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பக்கர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கற்பனையின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை அதிகாலை X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் காலிபாஃப் கடுமையாகச் சாடியதாக மெஹர் செய்தி நிறுவனம் (MNA) தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறுவதற்குப் பதிலடியாக அவரது அறிக்கை வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஓமான் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கடல் முற்றுகை ஆகியவை இதில் அடங்கும்.
"தடைகளை விதித்து, போர்நிறுத்தத்தை மீறுவதன் மூலம், டிரம்ப் தனது சொந்தக் கற்பனையில், பேச்சுவார்த்தை மேசையைச் சரணடையும் மேசையாக மாற்ற விரும்புகிறார் அல்லது மீண்டும் ஒரு போரைத் தொடங்குவதற்கான செயல்களை நியாயப்படுத்தப் பார்க்கிறார்," என நாட்டின் உயர் சட்டம் இயற்றுநரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை மேசையில் அழுத்த தந்திரோபாயங்கள் பலனளிக்காது என்று காலிபாஃப் வலியுறுத்தினார்.
"அச்சுறுத்தல்களின் நிழலில் நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஏற்க மாட்டோம். கடந்த இரண்டு வாரங்களாகப், போர்க்களத்தில் புதிய துருப்புச்சீட்டுகளை வெளியிட நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று அவர் கூறினார்.
அமெரிக்கக் கடற்படையின் சமீபத்திய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிச்சயமற்ற தன்மையில் மூழ்கியுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஓமான் கடலில் ஒரு ஈரானிய வர்த்தகக் கப்பலைக் குறிவைத்து அமெரிக்கக் கடற்படை போர்நிறுத்தத்தை மீறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கடல்சார் நெறிமுறைகளை மீறிய செயல் என ஈரான் இராணுவம் வர்ணித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி: போர்க்களத்தில் "புதிய வியூகங்களை" வெளிப்படுத்த ஈரான் தயார்
22 ஏப்ரல் 2026, 2:55 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை முறியடித்தது ஐக்கிய அரபு அமீரகம்
Shalini Rajamogun
5 மே 2026

antarabangsa
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் 'புராஜெக்ட் ஃப்ரீடம்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அமெரிக்கா பரிசீலனை
Shalini Rajamogun
12 மே 2026

antarabangsa
போர் முடிவுக்கு வருகிறதா? அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!
Shalini Rajamogun
6 மே 2026

national
மத்திய கிழக்கில் நடத்தப்படும் தாக்குதலுக்கு மலேசியா கண்டனம் தெரிவித்தது
Shalini Rajamogun
27 மே 2026

உங்கள் கருத்து என்ன?




