ஜொகூர் பாரு, ஏப்ரல் 18 – மருத்துவ சாதனங்க ளின் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விநியோகம் எப்போதும் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார்.
ரெசின் மற்றும் நாஃப்தா மூலப்பொருட்களை வாங்குவதற்காக சீனாவுடன் மேற்கொள்ளப் பட்ட உத்தி உடன்படிக்கை தொடர்பான விலை விவரங்கள், 'விருப்பமுள்ள வாங்குபவர், விருப்பமுள்ள விற்பனையாளர்' என்ற அடிப்படையில் இன்னும் பேச்சுவார்த்தை கட்டத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
"முதலில் விநியோகம் உறுதி செய்யப்படுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். விலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் 'விருப்பமுள்ள வாங்குபவர், விருப்பமுள்ள விற்பனையாளர்' என்ற அடிப்படையில் நடைபெறுவதால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை," என்றார் அவர்.
"எனவே, மருத்துவ சாதனங்களுக்கான விநியோகத்தைப் பாதிக்கும் எந்தவொரு இடையூறும் அல்லது தாமதமும் ஏற்படாது," என்று புக்கிட் பூலாய் நாடாளுமன்றப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
சீனாவிடமிருந்து இந்த இரு மூலப்பொருட்களை வாங்குவதை அதிகரிக்க மருத்துவ சாதனங்கள் ஆணையம் (MDA) மேற்கொண்ட உத்தி உடன்-படிக்கையின் மூலம் கிடைக்கும் சேமிப்பு குறித்து அவரிடம் வினவப்பட்டது.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்ட போதிலும், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டின் மருத்துவ சாதனங்களின் விநியோகம் நிலையானதாகவும் கட்டுப் பாட்டிலும் உள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
விநியோகச் சங்கிலியை நிலைப்படுத்து வதோடு, மலேசியாவில் முக்கியமான மருத்துவ சாதனங்களின் உற்பத்தியைத் தொடர்ச்சியாக உறுதி செய்வதையும் சீனாவுடனான இந்த உத்தி உடன்படிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
-- பெர்னாமா
https://bernama.com/bm/am/news.php?id=2546443
மருத்துவ சாதனங்களின் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் விநியோகம் எப்போதும் போதுமானதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்- அமைச்சர்
19 ஏப்ரல் 2026, 2:14 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
health
புஞ்சாக் ஆலம் சுகாதாரக் கிளினிக் கட்ட நிலம் கையகப்படுத்த சுகாதார அமைச்சு விண்ணப்பம்
Pakiya
31 மே 2026

national
HSIS இதய சிகிச்சை மையக் குழுவின் பெருமைக்குரிய சாதனைக்கு பிரதமர் அன்வார் பாராட்டு
Pakiya
23 மே 2026

national
ஹான்டாவைரஸ் பாதிப்பு: சொகுசுக் கப்பலில் மலேசியர்கள் எவரும் இல்லை - சுகாதார அமைச்சு உறுதி
Shalini Rajamogun
8 மே 2026

national
அத்தியாவசிய மருந்துகள், இன்சுலின் மற்றும் தடுப்பூசிகள் விநியோகம் சீராக இருப்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது
Shalini Rajamogun
17 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




