ஷா ஆலம்: பிலிப்பைன்ஸுக்கு டீசல் எரிபொருள் அனுப்பப்படுவதாகப் போலிச் செய்திகளைப் பரப்பியதாகக் கூறப்படும் ஒரு தனிநபர் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அந்த டீசல் பெட்ரோனாஸ் அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமானது அல்ல என்றும், அது விட்டோல் எனும் வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர் கடந்த வெள்ளிக்கிழமை வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டதாக ஸ்கெம்மம் கூறியது.
"மேலதிக விசாரணைக்கு உதவுவதற்காக, வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட அந்த நபரின் தொலைத்தொடர்பு சாதனமும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது" என்று ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233-இன் கீழ் இந்த விசாரணை நடத்தப் படுகிறது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், RM500,000 வரை அபராதம் அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
"பொதுமக்களைக் குழப்பும் வகையில் உறுதிப்படுத்தப் படாத தகவல்களைப் பரப்புவதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைத் தவறாகப் பயன் படுத்துவதை ஸ்கெம்மம் கடுமையாகக் கருதுகிறது" என்று அது கூறியது.
அதே வேளையில், சட்டத்தை மீறி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு தரப்பினர் மீதும் கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிலிப்பைன்ஸுக்கு டீசல் அனுப்பப்பட்டதா? போலிச் செய்தி பரப்பியவர் மீது ஸ்கெம்மம் விசாரணை!
18 ஏப்ரல் 2026, 4:10 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய பெண்ணுக்கு அபராதம்
Shalini Rajamogun
19 மே 2026

national
சிறுவர் & இணையப் பாதுகாப்பு: எஸ்கேஎம்எம் (SKMM) 37 கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தியது
Shalini Rajamogun
27 மே 2026

selangor
எம்ஏசிசி தொடர்பான போலித் தகவல்களைப் பதிவேற்றிய நபர் விசாரணை: அதிகாரிகள் அதிரடி
Pakiya
21 ஏப்ரல் 2026

national
மாதந்தோறும் வழங்கப்படும் 300 ரிங்கிட் ‘பூடி மடாணி’ டீசல் உதவித்தொகை தொடரும்
Shalini Rajamogun
19 மே 2026

உங்கள் கருத்து என்ன?




