சிரம்பான், ஏப்ரல் 17: பட்டறைக்குள் அத்துமீறி நுழைந்து ஆறு RXZ மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. ஜாலான் பண்டார் செனாவாங்கில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில், சுமார் RM60,000 மதிப்புள்ள ஆறு யமஹா RXZ மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போயுள்ளன.
ஷோய் மற்றும் எம்.எஸ் 88 ரக இரண்டு தலைக்கவசங்கள் மற்றும் சில மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களும் காணாமல் போயுள்ளதாகச் சிரம்பான் மாவட்டக் காவல்துறைத் தலைவர், ஏசிபி அஷார் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
"சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பட்டறையின் ஷட்டர் கதவு நெம்பித் திறக்கப்பட்டிருப்பதும், பட்டறையின் தரையில் உடைக்கப்பட்ட தடயங்களும், வளாகத்தின் சில பகுதிகளில் இரத்தக் கறைகளும் காணப்பட்டன," என்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
BRD 135, WVG 3923, JBS 1450, CAL 8555, NBQ 275 மற்றும் NAW 8927 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. இந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் பட்டறைக்குள் பூட்டப்பட்ட நிலையில் இருந்ததாக அவர் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 457 மற்றும் பிரிவு 379A-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி ஏஎஸ்பி முகமட் ஜவாஹிர் சைனுடினை 019-771 9434 என்ற எண்ணிலோ அல்லது சிரம்பான் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தை 06-679 2222 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிரம்பானில் RM60,000 மதிப்பிலான 6 RXZ மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டன
17 ஏப்ரல் 2026, 4:28 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கொலை மிரட்டல் புகார் தொடர்பில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் - MACC முன்னாள் தலைமை ஆணையர்
Shalini Rajamogun
27 மே 2026

national
சிரம்பான்–போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் விபத்து: ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு
Shalini Rajamogun
23 பிப்ரவரி 2026

national
சாலை விபத்தில் காவல்துறை அதிகாரி, அவரது மனைவி உயிரிழப்பு; நான்கு பிள்ளைகள் காயம்
Shalini Rajamogun
27 மே 2026

national
காஜாங்கில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக் கொலை
Shalini Rajamogun
26 மே 2026

உங்கள் கருத்து என்ன?




