ஷா ஆலாம், ஏப்ரல் 7: எரிபொருள் விலை சற்று அதிகரிக்க வாய்ப்பிருந்தாலும், எதிர்வரும் சில மாதங்களில் மலேசியா எண்ணெய் விநியோக நெருக்கடியை எதிர்கொள்ளாது என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பெட்ரோனாஸ் ஒரு நிகர எண்ணெய் இறக்குமதியாளராக இருப்பதாலும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் கொண்டுள்ள நல்லுறவாலும் இந்த உத்தரவாதம் வழங்கப் படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"நமது தயாரிப்புகள் பிரீமியம் தரத்தில் இருப்பதால் அவற்றின் விலை சற்று அதிகமாக உள்ளது, ஆனாலும் நாம் தொடர்ந்து இறக்குமதி செய்கிறோம்."
"பெட்ரோனாஸின் சிறந்த சாதனைப் பதிவுகள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகளுடனான அதன் நல்லுறவுகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப் பட வேண்டும்."
"எனவே, விநியோகத்தில் நாம் நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. விலையில் சிறிய பாதிப்புகள் இருக்கலாம், ஆனால் அடுத்த சில மாதங்களுக்கு விநியோகம் உறுதி செய்யப் பட்டுள்ளது," என்று பிஎச் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டி அவர் கூறினார்.
இன்று தலைநகரில் நடைபெற்ற கோலாலம்பூர்-அங்காரா 2026 கலந்துரையாடலில் பிரதமருடனான ஒரு அமர்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த ஏழு மலேசிய வர்த்தகக் கப்பல்களில் ஒன்றுக்கு பாதுகாப்பான பாதை வழங்கப்பட்டு, அது தனது இறுதி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.
உயர் மட்ட இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்ந்து இந்த சாதகமான முடிவு கிடைத்ததாக விஸ்மா புத்ரா தெரிவித்தது.
இதில், பிரதமர் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையே மார்ச் 26 அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடல், மற்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் மற்றும் அவரது ஈரானியப் பிரதிநிதி அப்பாஸ் அராக்சி இடையே மார்ச் 24 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஆகியவை அடங்கும்.
நாட்டின் எண்ணெய் விநியோகம் சீராக உள்ளது - பிரதமர் உத்தரவாதம்
7 ஏப்ரல் 2026, 7:03 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
ஹோர்முஸ் ஜலசந்தி சுங்கக் கட்டணத்தை நிராகரித்தது அமெரிக்கா; ஈரானிடமிருந்து யுரேனியத்தைக் கைப்பற்றச் சபதம்
Pakiya
22 மே 2026

video
Selangor giat pelbagaikan tenaga, hadapi kesan konflik Asia Barat
Kathiravan Manoharan
16 ஏப்ரல் 2026

antarabangsa
எண்ணெய் விலை உயர்வு- எகிப்த்தின் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துகிறது.
Pakiya
30 மார்ச் 2026

national
RON97, மானிய உதவியில்லாத RON 95 மற்றும் டீசல் விலை உயர்வு
Pakiya
21 மே 2026

உங்கள் கருத்து என்ன?





