ஜார்ஜ் டவுன், மே 31: நேற்றிரவு இங்குள்ள ஜாலான் பினாங்கிலுள்ள பழைய ஓடியோன் (Odeon) சினிமா தியேட்டர் கட்டடத்தில் செயல்பட்டு வந்த பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
தீ விபத்து ஏற்பட்டபோது, அந்த இரண்டு மாடி கட்டடத்திற்குள் அவர் சிக்கியிருக்கலாம் என பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) இயக்குநர் முகமட் ஷோகி ஹம்சா தெரிவித்தார்.
"இரவு சுமார் 11.15 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்த பிறகு, கட்டடத்தின் வெளியேறும் வழியில் அங்கு வேலை செய்தவர் என நம்பப்படும் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வெளியேறி தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்றபோது அவர் கட்டடத்திற்குள் சிக்கியிருக்கலாம்," என்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால் அந்த பொழுதுபோக்கு மையம் செயல்பட வில்லை என்றும், இறப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ஆடவரின் சடலம் பினாங்கு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத-னைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, இரவு 8.50 மணியளவில் இந்தத் தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாகவும், அதன் பின்னர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் பினாங்கு ஜேபிபிஎம் செயல்பாட்டு இயக்க மையம் (PGO) தெரிவித்தது.
"தீயணைப்பு வீரர்கள் வந்தடைந்ததும், பழைய ஓடியோன் சினிமா தியேட்டர் கட்டடத்தில் அமைந்திருந்த 1,393.54 சதுர மீட்டர் பரப்பளவி- லான 'மிட்நைட் பிளாக்' (Midnight Black) என்ற அழைக்கப்படும் அந்த இரண்டு மாடி பொழுது போக்கு மையத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
"இரவு 10.45 மணி நிலவரப்படி, தீ விபத்தினால் சுமார் 50 சதவீத சேதம் ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் தீயைக் கட்டுப்படுத்தும் மற்றும் அணைக்கும் பணிகளில் செயல்பாட்டுக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்," என்று நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது.
பினாங்கு ஜேபிபிஎம் PGO தகவல்படி, LFRT, FRT, EMRS மற்றும் ஏரியல் லேடர் பிளாட்ஃபார்ம் (ALP) உள்ளிட்ட இயந்திரங்களின் உதவியுடன், மேற்பார்வையாளர் உட்பட 25 தீயணைப்பு வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட தன்னார்வ தீயணைப்புப் படைகளும் (PBS) மீட்புப் பணிகளுக்கு உதவின.
ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வானில் பரவிய அடர்த்தியான புகையைத் தவிர, இந்தத் தீ விபத்தினால் ஜார்ஜ் டவுன் நகரப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பழைய சினிமா தியேட்டர் கட்டடத்தில் தீ விபத்து: ஆடவர் ஒருவர் பலி
31 மே 2026, 2:05 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
வகைnational
உங்கள் கருத்து என்ன?



