சபாவிற்கான 40 விழுக்காடு சிறப்பு மானிய உரிமை விவகாரம்: நாளை அன்வார் விளக்கம்

29 மே 2026, 8:23 AM
சபாவிற்கான 40 விழுக்காடு சிறப்பு மானிய உரிமை விவகாரம்: நாளை அன்வார் விளக்கம்

கோலாலம்பூர் மே 29 : மலேசிய ஒப்பந்தம் 1963-இல் (MA63) உள்ளபடி சபாவிற்கு 40 விழுக்காடு சிறப்பு மானிய உரிமை வழங்குவது தொடர்பான மறு ஆய்வு உட்பட, மத்திய அரசுக்கும் சபா மாநில அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து நாளை விளக்கமளிக்கப் போவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"சபாவில் நாளை நான் இதுபற்றி விளக்குவேன். நான் சபாவிற்குச் செல்கிறேன்," என்று இங்குள்ள சைதினா ஹம்சா பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் சுருக்கமாகத் தெரிவித்தார்.

சபாவிற்கு 40 விழுக்காடு சிறப்பு மானிய உரிமை வழங்குவது தொடர்பான மறு ஆய்வை மேற்கொள்வது உட்பட, முந்தைய நிர்வாகங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை சரிசெய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று கபுங்கான் ராக்யாட் சபா (GRS) தலைமைச் செயலாளர் டத்தோ அர்மிசான் முகமது அலி நேற்று கூறியிருந்தார்.

உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சருமான அர்மிசான், கூட்டரசு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளபடி, குறித்த சிறப்பு மானியத்திற்கான சபாவின் உரிமையை அங்கீகரிக்கும் பிரதமர் அன்வாரின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்த அர்ப்பணிப்பு அமைந்துள்ளது என்றார்.

முந்தைய மத்திய அரசு இந்த மறுஆய்வைச் செய்யத் தவறியது மட்டுமல்லாமல், 40 விழுக்காடு சிறப்பு மானியத்திற்கான சபாவின் உரிமை இனி அமலில் இல்லை என்று நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.