பத்தாங் காலியில் காரின் அடியில் சிக்கி முதியவர் பலி

28 மே 2026, 5:01 AM
பத்தாங் காலியில் காரின் அடியில் சிக்கி முதியவர் பலி

ஷா ஆலாம், மே 27: உலு சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள தாமான் செரியில் இன்று காரின் அடியில் சிக்கி 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை 5.20 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து புக்கிட் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) ஐந்து அதிகாரிகள் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

"சம்பவ இடத்திற்குச் சென்றடைந்ததும், புரோட்டோன் சாகா (Proton Saga) கார் ஒன்றின் அடியில் ஆடவர் ஒருவர் சிக்கியிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

"உடனடியாக அவரை அங்கிருந்து மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் காரின் அடியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து
விட்டதாகச் சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர். அதன் பின்னர், மேல் நடவடிக்கைக்காக அவரது உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமட் முக்லிஸ் மேலும் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.