கோலாலம்பூர், மே 26 – இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள், பிராந்திய பொருளாதார முன்னேற்றம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய, நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியாவுடனான வலுவான மூலோபாய ஒத்துழைப்பு உறவுகளை விரிவுபடுத்த மலேசியா உறுதிபூண்டுள்ளது.
மலேசியாவிற்கான இந்திய உயர் ஆணையர் பி.என். ரெட்டி, நாட்டில் தனது தூதரகப் பணியை நிறைவு செய்வதை முன்னிட்டு, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணனைச் சந்தித்து பிரியாவிடை பெற்றார். இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ரெட்டி வழங்கிய அர்ப்பணிப்பிற்காக அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
"அவரது பதவிக் காலத்தில் மலேசியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நட்புறவையும் மூலோபாய ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கிற்கும் அர்ப்பணிப்பிற்கு எனது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ரமணன் கூறினார்.
"விரிவான மூலோபாய பங்காளிகளாக இரு நாடுகளின் நிலைக்கு ஏற்ப, மலேசியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ள இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கியது," என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.
திரு ரெட்டி தனது பதவிக் காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம் படுத்துவதில் முக்கியப் பங்காற்றியதோடு, இரு நாடுகளுக்கும் இடையே மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நட்புறவைக் கட்டியெழுப்புவதிலும் வெற்றி கண்டுள்ளார் என்று ரமணன் கூறினார்.
-- பெர்னாமா
மலேசியா-இந்தியா மூலோபாய ஒத்துழைப்பு உறவுகளை விரிவுபடுத்த உறுதி - ரமணன்
26 மே 2026, 2:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
வகைnational
உங்கள் கருத்து என்ன?

