உலகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, செலவின அழுத்தத்தை எதிர்கொள்ள 'புடி அக்ரி-கொமோடிட்டி' திட்டம் தொடரும் - பிரதமர் அன்வார்

26 மே 2026, 1:00 AM
உலகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, செலவின அழுத்தத்தை எதிர்கொள்ள 'புடி அக்ரி-கொமோடிட்டி' திட்டம் தொடரும் - பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், மே 26 – நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் நலிந்த பிரிவினருக்கு உதவும் வகையில், இலக்கு வைக்கப்பட்ட புடி மடாணி: புடி அக்ரி-கொமொடிட்டி (BUDI MADANI: BUDI Agri-Komoditi) முன் முயற்சியைத் தொடர அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின அழுத்தம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையை மக்கள் எதிர் கொண்டுள்ளதை தாம் புரிந்து கொள்வதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“இந்தக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் சிறு விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் நலிந்த பிரிவினருக்கு உதவும் வகையில், இலக்கு வைக்கப்பட்ட புடி மடாணி: புடி அக்ரி-கொமொடிட்டி முன்முயற்சியை அரசாங்கம் தொடர ஒப்புக் கொண்டுள்ளது,” என்று அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இன்று நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக் (MTEN) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மோசமடைந்து வரும் உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடி குறித்து சுகாதார அமைச்சு (KKM) மற்றும் பெருந்தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சு (KPK) ஆகியவற்றின் முக்கிய விளக்கங்களைக் கேட்டறிந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, நாட்டில் மருந்து விநியோகம் ஒட்டுமொத்தமாக நிலையாக இருப்பதாகவும், மக்கள் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க, கையிருப்பு மற்றும் விலை தொடர்பான சவால்களை சுகாதார அமைச்சு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும் அன்வார் கூறினார்.

“எதிர்காலத்தில் என்ன சவால்கள் வந்தாலும், மடாணி அரசாங்கம் தொடர்ந்து கடுமையாக உழைக்கும், மனிதாபிமானத்துடன் செயல்படும், மேலும் மக்களின் நலன் எப்போதும் நாட்டின் முதன்மையாக இருப்பதை உறுதி செய்யும்,” என்று அவர் மேலும் கூறினார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.