NKVE-யில் வீதி ரவுடிகள் மீதான அதிரடி சோதனை: போதைப்பொருள் பயன்படுத்திய 8 பேர் கைது, 41 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

25 மே 2026, 3:55 AM
NKVE-யில் வீதி ரவுடிகள் மீதான அதிரடி சோதனை: போதைப்பொருள் பயன்படுத்திய 8 பேர் கைது, 41 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

ஷா ஆலாம், மே 25 - இன்று அதிகாலை புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில் (NKVE) உள்ள புக்கிட் ராஜா சுங்கச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த வீதி ரவுடிகள் தடுப்பு நடவடிக்கையின் (Operasi Bersepadu Samseng Jalanan) போது, போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் (AADK) மேற்கொண்ட 50 சீரற்ற பரிசோதனைகளின் முடிவில், அவர்களில் 7 பேர் கெத்தும் (Ketum) நீருக்கும், ஒருவர் கஞ்சாவுக்கும் பாசிட்டிவ் முடிவைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைமையகத்தின் (IPK) போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு (JSPT), புக்கிட் அமான் JSPT மற்றும் AADK ஆகியவற்றின் உதவியுடன் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தய நடவடிக்கைகளைக் கண்டறிவதற்காக, பல மணி நேர கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்களுக்குப் பிறகு அதிகாலை 3 மணியளவில் அந்தச் சாலை மூடப்பட்டது.

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் (Modified motorcycles) வேகத்தை சோதிக்கும் 'பந்தயக் களமாக' இந்த இடம் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.

"இந்த நடவடிக்கையின் போது, 103 வாகனங்களும் 14 முதல் 32 வயதுக்குட்பட்ட 120 நபர்களும் சோதனையிடப் பட்டனர்.

"பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 200 சம்மன்கள் வழங்கப் பட்டதோடு, மேல் நடவடிக்கைக்காக 41 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளை ஒழிப்பதற்கும், அதே வேளையில் மக்களின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் சாலை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.