கல்வி முறை தொடர்ந்து பொருத்தமாக இருக்க, ஆசிரியர்கள் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற வேண்டும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்

22 மே 2026, 5:56 AM
கல்வி முறை தொடர்ந்து பொருத்தமாக இருக்க, ஆசிரியர்கள் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற வேண்டும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்

ஷா ஆலாம், மே 22: கல்வி முறை தொடர்ந்து பொருத்தமாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இருப்பதை உறுதி செய்ய, தொழில்நுட்ப வளர்ச்சி, உலகளாவிய சவால்கள் மற்றும் சமூகத்தின் மாறும் தேவைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்களாக மட்டுமே செயல்படாமல், எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில் மாற்றத்திற்கான தலைவர்களாகவும் செயல் படுகிறார்கள் என்று இஸ்லாமிய மதம் மற்றும் புத்தாக்கக் கலாச்சாரப் பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) டாக்டர் முகமட் ஃபாஹ்மி ஙா தெரிவித்தார்.

"ஒரு சிறந்த ஆசிரியர் என்பவர் அறிவை வழங்குபவர் மட்டுமல்ல, அவர் கல்வி முறை எப்போதும் பொருத்தமானதாகவும், ஆற்றல் மிக்கதாகவும், காலத்திற்கு ஏற்பவும் இருப்பதை உறுதி செய்யும் மாற்றத்திற்கான ஒரு தலைவராகவும் உள்ளார்," என்று அவர் கூறினார்.

இன்று இங்குள்ள சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜிஸ் ஷா பள்ளிவாசல் விருந்து மண்டபத்தில், தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையின் (JAIS) 2026-ஆம் ஆண்டிற்கான கல்வி அங்கீகார மற்றும் பாராட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில், JAIS கல்வி முறையின் கீழ் சுமார் 840 குர்ஆன் மற்றும் ஃபர்து ஐன் வகுப்பு (KAFA) ஆசிரியர்கள், நிரந்தர மற்றும் ஒப்பந்த ஆசிரியர்கள் உட்பட சிலாங்கூர் முழுவதிலும் உள்ள சுமார் 10,000 ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

அவரைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தின் கருப் பொருளான "குரு பித்தாரா நாடி நெகாரா" (Guru Bitara Nadi Negara) என்பது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதோடு மட்டுமின்றி, இனம் மற்றும் நாட்டின் வளர்ச்சியின் நாடியாக விளங்கும் ஒரு உன்னத மனிதராக ஆசிரியரின் பங்கு குறித்த ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது.

அதே விழாவில், டாக்டர் குடோரி அகமட்டுக்கு சிறப்பு ஆசிரியர் மற்றும் கல்வியாளர் விருதும், முகமட் ஜாக்கி ராஜிகின் மற்றும் ருஸ்னா ஜமாலி ஆகியோருக்கு முறையே சிறந்த ஆண் மற்றும் பெண் ஆசிரியர் விருதுகளும் வழங்கப்பட்டன.

சிறந்த காஃபா (KAFA) ஆசிரியர் விருது, சிறந்த தலைமை ஆசிரியர், சிறந்த காஃபா மேற்பார்வையாளர், 25 ஆண்டு சேவை விருது மற்றும் 60 வயது ஓய்வுபெறும் ஆசிரியர் விருதுகள் உட்பட 387 காஃபா ஆசிரியர்கள் அங்கீகாரங்களைப் பெற்றனர்.

மேலும், 11 சமயக் கல்வி நிறுவனங்களும் அந்தந்தப் பிரிவுகளின் அடிப்படையில் விருதுகளை பெற்று சிறப்பிக்கப்பட்டன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.