அதிகாரத் துஷ்பிரயோகப் புகார்களை மறுத்த பிடிஎம் தலைவர், போலிசில் புகார்

22 மே 2026, 4:58 AM
அதிகாரத் துஷ்பிரயோகப் புகார்களை மறுத்த பிடிஎம் தலைவர், போலிசில் புகார்

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் பரவி வரும், பணம் கேட்டதாக அல்லது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மலேசிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் (பிடிஎம்) தலைவர் டத்தோ முகமது இருவான் சுல்கிப்லி மறுத்துள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையற்ற, ஆதாரமற்றவை என்றும், தனது நற்பெயருக்கும் நேர்மைக்கும் களங்கம் விளைவிக்கும் அவதூறு என்றும் அவர் விவரித்தார்.

"நான் இன்று நீலாய் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். மேலதிக நடவடிக்கைகளுக்கு இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளேன்," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து விரிவாக விளக்கமளிக்கவும், உண்மையை தெளிவுபடுத்தவும் நாளை ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் முகமது இருவான் தெரிவித்தார்.

முன்னதாக, ஒவ்வொரு மாதமும் பிடிஎம்-க்கு பணம் அனுப்பும் படி வற்புறுத்தப் பட்டதாக ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளர் முகநூலில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

-- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.