2026 செப்பாக் தக்ராவ் உலகக் கிண்ண குவாட்ரன் பிரிவில் மலேசியா வெற்றி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து

20 மே 2026, 4:22 AM
2026 செப்பாக் தக்ராவ் உலகக் கிண்ண குவாட்ரன் பிரிவில் மலேசியா வெற்றி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து

கோலாலம்பூர், மே 20: 2026-ஆம் ஆண்டுக்கான செப்பாக் தக்ராவ் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்று வாகை சூடிய தேசிய குவாட்ரன் அணிக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இன்று தனது முகநூல் பதிவு மூலம், இந்த வெற்றி உலக அரங்கில் மலேசியாவின் பெயரைப் பெருமைப் படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்நாட்டுத் திறமையாளர்கள் சர்வதேச அளவில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான விடாமுயற்சி, உறுதிப்பாடு மற்றும் திறனைக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது என்று அவர் கூறினார்.

“நாட்டின் விளையாட்டு  நாயகர்களுக்கு பாராட்டுக்கள். வெளிப்படுத்தப்பட்ட போராட்ட குணம் அனைத்து மலேசியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. வாழ்த்துகள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இரவு இங்குள்ள தித்திவங்சா அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, குவாட்ரன் பிரிவில் மலேசியா தனது முதல் கோப்பையை வென்றது.

முகமது அபிபுடின் முகமது ரசாலி, முகமது ஷஹரில் ஐமான் ஹலிம், அமிருல் சஸ்வான் அமீர் மற்றும் ஐடில் ஐமான் அஸ்வாவி ஆகியோர் அடங்கிய தேசிய அணிக்கு, 'செபாக் தக்ராவின் தாயகம்' என்று அழைக்கப்படும் அந்த அரங்கில் திரண்டிருந்த சுமார் 3,000 ரசிகர்களின் அமோக ஆதரவு கூடுதல் பலத்தைச் சேர்த்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.