இலக்கு அடிப்படையில் எரிபொருள் மானியம் குடும்பச் செலவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் — அமைச்சர்

16 மே 2026, 10:59 AM
இலக்கு அடிப்படையில் எரிபொருள் மானியம் குடும்பச் செலவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் — அமைச்சர்

கோலாலம்பூர், மே 16 — இலக்கு அடிப்படையில் எரிபொருள் மானிய திட்டம், உண்மையாக தேவையுள்ள மக்களுக்கு பயன் அளிப்பதை உறுதி செய்ய, குடும்பங்களின் நியாயமான வாழ்வுச் செலவுகளையும் கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட வேண்டும் என்று Akmal Nasrullah Mohd Nasir பொருளாதார அமைச்சர் தெரிவித்தார்.

வருமான அடிப்படையில் மட்டும் மானிய தகுதி நிர்ணயிக்கப் படக் கூடாது என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிதிசார் பொறுப்புகள் மற்றும் செலவுகள் வேறுபடுகின்றன என்றும் அவர் கூறினார்.“பயன்படுத்த வேண்டிய மிகச் சரியான வரம்பு அல்லது நிலை எது என்பதை தீர்மானிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

அமைச்சின் பார்வையில், இந்த விஷயம் இன்னும் விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.“பல்வேறு கோணங்களில் விவாதிக்கப் படக்கூடிய வகையில் பிரிவுகளை உருவாக்க விரும்பவில்லை.

ஏனெனில் பொருளாதார நிலை என்பது வருமானத்தை மட்டும் கொண்டு அளவிடப் படுவதில்லை; நியாயமான அடிப்படை செலவுகள் மற்றும் பிற தொடர்புடைய காரணிகளும் அதில் அடங்கும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மலேசிய பொருளாதார அமைச்சு  Ministry of Economy Malaysia மற்றும் கூட்டரசு பிரதேச இஸ்மிய மன்றம் Majlis Agama Islam Wilayah Persekutuan (MAIWP) இணைந்து செயல் படுத்தும் மக்கள்  வருமான - உணவு நிறுவன முன்னெடுப்புகள் ( People’s Income Initiative–Food Entrepreneur Initiative) (IPR-INSAN) திட்டத்தின் மூலோபாய ஒத்துழைப்பு தொடக்க விழாவிற்கு பின்னர் அவர் இதனை கூறினார்.

மேலும் விளக்கமளித்த அவர், குறிப்பாக டீசல் மானியங்களைச் சிறப்பாக நிர்வகித்து, அரசின் நிதி மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் மானிய இலக்கு அமைப்பை அமைச்சகம் தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

“உலகளாவிய மோதல்கள் தொடரும் வரை அதன் சுமையை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். அதனால்தான் அவ்வப்போது தணிக்கை மற்றும் தலையீட்டு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன,” என்றார்.

-அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் சீனத் தலைவர் Xi Jinping இடையேயான சந்திப்பு உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கேட்கப்பட்டபோது, மலேசியாவின் முக்கிய கவனம் உள்நாட்டு பொருளாதார தாங்கும் திறனை வலுப்படுத்து-வதில்தான் இருப்பதாக அக்மால் கூறினார்.

“உலக அரங்கில் என்ன மாற்றங்கள் நடந்தாலும், நிலைமை சீராகும் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம். ஆனால் மலேசியாவைப் பொறுத்தவரை, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடையின்றி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

“நமது தாங்கும் திறனை நிலைநிறுத்துவதற்கு முடிந்தவரை முயற்சித்து வருகிறோம். ஆனால் இந்த கட்டத்தில் அதற்கும் மேலாக கருத்து தெரிவிப்பது எனக்கு பொருத்தமல்ல,” என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.