கிள்ளான் செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இந்தியக் கலாச்சார நிகழ்வுடன் சித்திரை புத்தாண்டு கிள்ளான் செந்தோசா மே 10; கிள்ளான் செந்தோசா சட்டமன்றத் தொகுதியில், இன்று மாபெரும் சித்திரை புத்தாண்டை கொண்டாட்டம். இந்தியக் கலாச்சாரம் குறித்து நமது இளைய சமுதாயமும் இந்நாட்டில் வாழும் மற்ற இனங்களும் அறிந்து கொள்ளவும் அதே வேளையில் தேச ஒற்றுமையை போற்றும் புதுமை விழாவாக கொண்டாட அனைவரையும் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஆகியோர்.
இப்பொழுது நடைபெறுகிறது இந்தியக் கலாச்சார நிகழ்வுடன் சித்திரை புத்தாண்டு கிள்ளான் செந்தோசாவில்
10 மே 2026, 4:21 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
இன்று காலை 9.00 மணிக்கு தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி யில் தொடங்கிய இவ்விழா மாலை 7.00 மணி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய விழாவை இந்திய கலாச்சாரப் பண்பாடு மற்றும் ஒற்றுமை திருவிழாவாக மட்டுமின்றி வேறு பல அம்சங்களையும் சேர்த்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் உடல் ஆரோக்கிய நிகழ்வுகளுடன், அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து தொகுதி வாழும் பொது மக்கள் அறிந்து கொள்ள இந்த ஒன்றுகூடல் சிறந்த வாய்ப்பு வழங்குவதாக கூறினார். அதே வேளையில் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப் படுத்துவது, இளைஞர், குழந்தை மற்றும் மகளிர் கல்வி, பொருளாதார, சமூக குடும்ப மேம்பாடுகளை போற்றுவதோடு உயர்கல்வி மாணவர்களுக்கு, கல்வி வழிகாட்டல் உரையாடல்கள் நடக்கிறது, பல்வேறு துறைகளில் உள்ள தனித் திறமை மற்றும் சிறப்புமிக்கவர்களையும் கல்வியில் சிறந்த அடைவுநிலை பெற்றவர்களை பாராட்டி சிறப்பிப்பதும் உள்ளது.இந்நிகழ்வுக்கு சுமார் 2000 வருகையாளர்களை எதிர்பார்க்கும் ஏற்பாட்டாளர்கள் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களின் வருகையையும் எதிர் பார்க்கின்றனர் இந்த நிகழ்வில் விருந்துபசரிப்பு டன், வருகையாளர்களை ஊக்குவிக்க மோட்டார் சைக்கிள் , தொலைக்காட்சிப் பெட்டி உட்படப் பல தரமான பரிசுகளுடன் அதிர்ஷ்டக் குலுக்கும் இடம் பெறும்.
அதே வேளையில் சில வசதியற்ற பிள்ளைகளின் பள்ளி போக்குவரத்து கட்டணங்களை ஏற்கும் வண்ணம், சட்டமன்றத் தொகுதி உடன் இணைந்து சில நன்கொடையாளர்கள் ஏற்படுத்த உள்ள ஒரு உதவி நிதி திட்டம் தோற்றுவிக்கப்படும், ஒட்டு மொத்தமாக இது ஒரு சமுதாய விழிப்புணர்வு மற்றும் உதவித் திட்டங்களின் தொகுப்பு.
இங்கு வருகையாளர்கள் பயனடைவதையும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதன் உன்னதத்தையும் ஒற்றுமையைப் பலப்படுத்துவதையும், நோக்கமாகக் கொண்ட ஒரு நிகழ்வு என்பதால் அனைவரும் திரண்டு வந்து பங்கெடுத்துக் கொள்ள அழைக்கிறார் செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ்.
தொடர்புடைய செய்திகள்
selangor
சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்: கலாச்சார மையத்தை உருவாக்க மந்திரி புசார் ஆதரவு; ‘ரோடா ஹராப்பான்’ திட்டம் தொடக்கம்
Kathiravan Manoharan
11 மே 2026

video
Sentosa Chittirai Puthandu Vizha: Dilancarkan inisiatif Roda Harapan Anak Sentosa
Kathiravan Manoharan
11 மே 2026

selangor
செந்தோசா சட்டமன்ற தொகுதியில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்- மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கலந்து சிறப்பிப்பு
Mavitthran
2 மார்ச் 2026

selangor
தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கக் 'கிளீன் அண்ட் கிரீன் 2026' திட்டம் - செந்தோசா தொகுதி
Shalini Rajamogun
5 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



