சுற்றுச்சூழல் வனப்பூங்காவில் உள்ள செயற்கைக் குளத்தில் வழுக்கி விழுந்த 10 வயது சிறுமி-மரணம்

3 மே 2026, 4:10 AM
சுற்றுச்சூழல் வனப்பூங்காவில் உள்ள செயற்கைக் குளத்தில் வழுக்கி விழுந்த 10 வயது சிறுமி-மரணம்

சிரம்பான்: ஜெலுபுவில் உள்ள ஜெராம் டோய் சுற்றுச்சூழல் வனப்பூங்காவில் உள்ள செயற்கைக் குளத்தில் வழுக்கி விழுந்த 10 வயது சிறுமி ஒருவர் நேற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெலுபு மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஸிஸான் சைட் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து மலேசிய தற்காப்புப் படையைச் (APAM) சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் நேற்று மாலை 5.44 மணியளவில் தகவல் அளித்ததாகத் தெரிவித்தார்.

"ஆரம்பகட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்-காக அவ்விடத்திற்கு வந்துள்ளார். சம்பவத்தின் போது, அச்சிறுமியும் அவரது தாயாரும் குளத்தில் வழுக்கி விழுந்துள்ளனர்," என்று அவர் கூறினார்.

"சிறுமிியின் தாயார் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார், ஆனால் சிறுமி குளத்தின் அடிக்குச் சென்று மூழ்கினார். தனது மகளுக்கு நீச்சல் தெரியாது என தாயார் தெரிவித்ததாக," அஸிஸான் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

சம்பவ இடத்தில் இருந்த மற்ற சுற்றுலாப் பயணிகளின் உதவியுடன், சிறுமி குளத்தின் அடியிலிருந்து மீட்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காக ஜெலுபு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் பிற்பகல் 2.58 மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அஸிஸான் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.