கோத்தா பாரு: கெத்தேரே, கம்போங் சீமாவில் 61 கத்திக் குத்துக் காயங்களுடன் இறந்து கிடந்த கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு பதின்ம வயது இளைஞர்கள் ஏழு நாட்களுக்குக் காவல் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக 60 வயது பெண் மற்றும் 66 வயது ஆடவர் ஆகிய இரு முதியவர்கள் மூன்று நாட்களுக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
19 வயதுடைய இரு இளைஞர்கள் மற்றும் அவ்விரு முதியவர்களையும் இன்று முதல் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் அமிருல் அஷ்ரஃப் அப்துல் ரசிட் உத்தரவிட்டார். இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
முன்னதாக, சந்தேக நபர்கள் அனைவரும் இன்று காலை 8.40 மணியளவில் சிறை உடை அணிந்து, கைவிலங்கிடப் பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பேராவைச் சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவியின் சடலம் நேற்று நெல் வயலுக்கு அருகிலுள்ள சாலையில் கண்டெடுக்கப்பட்டதாக கிளந்தான் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ முகமது யூசோஃப் மாமாட் நேற்று உறுதிப்படுத்தினார்.
அந்த மாணவி வேறு இடத்தில் கொலை செய்யப் பட்டு, அவரது சடலம் இப்பகுதியில் வீசப் பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.
மார்பில் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட காயங்களே மரணத்திற்குக் காரணம் என உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
கல்லூரி மாணவர் 61 முறை குத்திக் கொலை: இரண்டு சிறுவர்கள் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பு
2 மே 2026, 3:36 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?




