கோத்தா பாரு: கெத்தேரே, கம்போங் சிமாவில் 61 கத்திக் குத்துகளுடன் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவ இரு ஆடவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ஹரியான் மெட்ரோவின் தகவல்படி, 19 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களும் நேற்று இரவு கெத்தேரே சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைது செய்யப் பட்டதாகத் தெரிகிறது.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் இன்று கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற காவல்துறை விண்ணப்பிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக, கெத்தேரே, ஜாலான் கம்போங் குபாங் கியாட் பகுதியில் நள்ளிரவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தில், உடல் முழுவதும் 61 கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சடலத்துடன் எந்த அடையாள ஆவணங்களும் இல்லை என்றும், இருப்பினும் தேசியப் பதிவுத் துறையின் கைரேகை சரிபார்ப்பு மூலம் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டதாகவும் கிளந்தான் மாநில காவல் துறைத் தலைவர், டத்தோ முகமது யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.
அப்பெண் வேறோர் இடத்தில் கொலை செய்யப் பட்டு, அவரது சடலம் இங்கு வீசப் பட்டிருக்கலாம் என நம்பப் படுவதாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையில், பலியானவர் 'SYAA' என்ற பெயர் பொறிக்கப்பட்ட கழுத்துச் சங்கிலி, இடது மணிக்கட்டில் ஒரு கைச்சங்கிலி மற்றும் வலது கை நடுவிரலில் ஒரு மோதிரம் அணிந்திருந்தது தெரியவந்தது என்று அவர் மேலும் கூறினார்.
கல்லூரி மாணவி 61 முறை குத்திக் கொலை, இருவர் கைது
2 மே 2026, 3:13 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?





