ஷா ஆலாம், ஏப்ரல் 2: பத்து 14, கம்போங் செர்டாங்கில் உள்ள சட்டவிரோத வீட்டுக் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) மற்றும் பல ஏஜென்சிகளின் விரைவான நடவடிக்கையைத் தொடர்ந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
காலை 11.33 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து கோல சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சிலாங்கூர் JBPM தெரிவித்தது.
"சுமார் 10 x 40 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்தத் தீ விபத்தில், சம்பவ இடத்தில் இரண்டு வெப்பப் புள்ளிகள் (hotspot) கண்டறியப்பட்டன.
"சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, 27 நிமிடங்களில் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்தனர்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
சிலாங்கூர் JBPM இயக்குநர், டத்தோ வான் எம்.டி. ரசாலி வான் இஸ்மாயிலும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதையும், பணிகள் சுமுகமாக நடப்பதையும் உறுதி செய்தார்.
திறந்த நீர் ஆதாரத்தைப் பயன்படுத்தி, கிள்ளான் ராயல் சிட்டி கவுன்சிலின் (MBDK) பாந்தாஸ் ஏஜென்சியின் GP885 ரக போர்ட்டபள் பம்ப் உதவியுடன், 300 அடி நீளமுள்ள இரண்டு நீர் குழாய்கள் மூலம் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அந்தத் துறை மேலும் தெரிவித்தது.
"இந்த நடவடிக்கைக்கு மூத்த தீயணைப்பு அதிகாரி I (Pegawai Bomba Kanan I) தலைமை தாங்கினார். ஒரு ஃபயர் ரெஸ்க்யூ டெண்டர் (FRT) வாகனத்துடன் 11 வீரர்கள் இதில் ஈடுபட்டனர். கிள்ளான் ராயல் சிட்டி கவுன்சில் (MBDK) மற்றும் சிலாங்கூர் மாநிலச் செயலகம் (SUK Selangor) உள்ளிட்ட பிற ஏஜென்சிகளும் இந்த நடவடிக்கையில் உதவின," என்று அது கூறியது.
வீட்டுக் குப்பைக் கிடங்கில் தீ, சிலாங்கூர் தீயணைப்பு துறை (JBPM) மற்றும் பல ஏஜென்சிகளின் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
2 ஏப்ரல் 2026, 5:52 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
கோல சிலாங்கூர் அருங்காட்சியக மேம்பாட்டுப் பணிகள் 20 விழுக்காட்டை எட்டியுள்ளன, இந்த செப்டம்பரில் நிறைவடையும்
Shalini Rajamogun
27 ஏப்ரல் 2026

national
இந்தோனேசியர்களுக்குச் சொந்தமான 15 சட்டவிரோதக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

selangor
கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் வாகன நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி தேவை
Shalini Rajamogun
1 பிப்ரவரி 2026

selangor
கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா: மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் கலந்து சிறப்பித்தார்
Mavitthran
1 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




