ஜோர்ஜ்டவுன், மார்ச் 26: தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலையைத் தொடர்ந்து பினாங்கில் வெப்பப் பக்கவாத சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கோய் சி சென் கூறினார்.
மாநில சுகாதாரத் துறையிடம் சரிபார்த்ததில், இதுவரை எந்த சம்பவமும் பதிவாகவில்லை என்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"கடந்த சில நாட்களாக வானிலை மிகவும் வெப்பமாகவும், கடுமையாகவும் உள்ளது. எனவே, இந்தச் சூழ்நிலையில் பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
2026 ஆம் ஆண்டு பருவத்திற்கான இளைஞர் மற்றும் தலைவர் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் மேலாண்மை மற்றும் மேம்பாட்டிற்காகப், பினாங்கு எஃப்சி மற்றும் பினாங்கு காற்பந்துச் சங்கம் (FAP) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புக் கையொப்பமிடும் நிகழ்விற்குப் பிறகு, இன்று கோம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், பொதுமக்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், வெப்பத்தை எளிதில் ஈர்க்கும் கருமையான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும், மேலும் உடல்நலக் குறைபாடுகளைத் தவிர்க்க வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோய் அறிவுறுத்தினார்.
முன்னதாக, சுகாதார அமைச்சு (KKM) வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஜனவரி 1 முதல் மார்ச் 24 வரை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான கண்காணிப்பில், வெப்பம் தொடர்பான 15 நோய்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 11 வெப்பச் சோர்வு, 1 வெப்பப் பிடிப்பு மற்றும் 3 வெப்பப் பக்கவாத சம்பவங்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த திங்கட்கிழமை, மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா), பினாங்கின் வடகிழக்கு மாவட்டம் உட்பட தீபகற்ப மலேசியாவில் 14 பகுதிகள் முதல் நிலை எச்சரிக்கையின் கீழ் இருப்பதாக அறிவித்தது.
வெப்ப அலை நிலை என்பது தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் குறைந்தபட்சம் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான தினசரி அதிகபட்ச வெப்பநிலையைக் குறிக்கும். அதே வேளையில், முதல் நிலை (விழிப்புநிலை) என்பது அதே காலகட்டத்தில் 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைக் குறிக்கிறது.
பினாங்கில் வெப்பப் பக்கவாத சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை - ஆட்சிக் குழு உறுப்பினர்
26 மார்ச் 2026, 9:49 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மலேசியாவின் 15 பகுதிகளில் கடும் வெயில்: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெட்மலேசியா அறிவுறுத்தல்
Shalini Rajamogun
27 ஏப்ரல் 2026

national
தீபகற்ப மலேசியாவில் 10 இடங்களில் வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

national
தற்போது நிலவும் வெப்பமான வானிலை வழக்கமான ஒன்றுதான் – மெட்மலேசியா
Shalini Rajamogun
9 ஏப்ரல் 2026

national
மலேசியாவில் ஜூன் மாதம் வரை நீடிக்கும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Shalini Rajamogun
6 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




