ஜுவாலான் ரஹ்மா ஏசான் திட்டத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கம்

30 ஏப்ரல் 2026, 9:23 AM
ஜுவாலான் ரஹ்மா ஏசான் திட்டத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கம்

ஷா ஆலம், ஏப்ரல் 30: பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ஜுவாலான் ரஹ்மா ஏசான் திட்டத்தின் கீழ் நேற்று முதல், வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை பலப்படுத்தும் முயற்சியில், உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்துடன் (KPDN) இணைந்து சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (PKPS) இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

"ஜுவாலான் ரஹ்மா ஏசான் விற்பனைத் தளத்தில் பொருட்களை வாங்கும் போது, பொதுமக்கள் தங்களின் சொந்த மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று முகநூல் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவுகளை குறைப்பதற்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைப் பயன்படுத்தும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் மாநில அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க உதவும் ஒரு முயற்சியாக ஜுவாலான் ரஹ்மா எசான் திட்டம் பரவலாக அறியப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.