அரசாங்கம் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகளும் மிதமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளதாக மடாணி அரசாங்கத்தின் பேச்சாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
தொடர்புத் துறை அமைச்சருமான ஃபஹ்மி, நேற்று தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் (MTEN) கூட்டத்தைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விஷயம் எழுப்பப் பட்டதாகக் கூறினார்.
"அமைச்சகங்கள், ஏஜென்சிகள், சட்டப்பூர்வ அமைப்புகள், அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் (GLIC) மற்றும் அரசாங்கம் சார்ந்த நிறுவனங்கள் (GLC) ஆகியவை நடத்தும் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகள், பட்டறைகள் மற்றும் பெரிய அளவிலான நடவடிக்கைகள் மிதமான அளவில் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்," என்று அவர் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்வதற்காக, செயல்பாட்டுச் செலவினங்களை ஒருங்கிணைப்பது குறித்து ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் நிதி அமைச்சகம் தெரிவித்திருப்பதாக ஃபஹ்மி கூறினார்.
"உலகளாவிய விநியோக நெருக்கடியின் காரணமாக மலேசியா சவால்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், இது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப் பட்டுள்ளன. மேலதிக விவரங்கள் தலைமைச் செயலாளர் மற்றும் கருவூலத் தலைமைச் செயலாளருடன் இணைந்து அமைச்சகங்களின் தலைமைச் செயலாளர்களால் வழங்கப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
கூட்டரசு அரசாங்கத்தின் கீழ் உள்ள மடாணி தத்தெடுப்பு கிராமத் திட்டத்தை (Program Kampung Angkat MADANI), குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கவனமாக ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் பிரதமர் விரும்புவதாக ஃபஹ்மி மேலும் கூறினார்.
இதற்கிடையில், கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சரான துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் டத்தோஸ்ரீஅகமதுசாஹிட்ஹமிடி, தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள கிராம சமூக மையங்களில் நடைபெறும் நடவடிக்கைகளை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) கீழ் இயங்கும் தேசிய தகவல் மையத்துடன் (NADI) ஒருங்கிணைக்க வேண்டும் என்று பரிந்துரைத்த தாகவும் அவர் கூறினார்.
இளம் வயதினர் மத்தியில் சமூக ஊடகப் பயன்பாடு குறித்த பிரச்சினை தொடர்பாக, வயதை உறுதிப்படுத்த பயனர் அடையாள சரிபார்ப்பு முறையை (e-KYC) செயல்படுத்த தொடர்புத் துறை அமைச்சு விரும்புவதாக ஃபஹ்மி கூறினார்.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சொந்தமாக சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும், மாறாக அது பெற்றோர்களால் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.
"பெற்றோருக்கு கட்டுப்பாட்டைக் கொடுப்பதே இங்கு முக்கிய பிரச்சினை. முன்பின் தெரியாதவர்களிடம் சிறு குழந்தைகள் பேசுவதை நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, இளம் வயதினரிடம் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான வயது வரம்பை அமல்படுத்துவது தொடர்பான முன்மொழிவு அனைத்து தரப்பினரின் ஈடுபாட்டுடன் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார். டிஜிட்டல் உலகில் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க இது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கம் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகளும் மிதமான முறையில் நடத்தப்பட வேண்டும்
30 ஏப்ரல் 2026, 6:20 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?


