ஷா ஆலாம், ஏப்ரல் 30: பெக்கான், பகாங் இஸ்லாமிய சமயம் மற்றும் மலாய் பழக்க வழக்க மன்றத்தின் (MUIP) அலுவலகத்திற்கு அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு படிவம் ஒன்று மாணவரைத் தாக்கி காயப்படுத்திய கலகம் தொடர்பில் ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 13 வயதான பாதிக்கப் பட்டவரின் வலது கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக பெக்கான் மாவட்டக் காவல் துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஜைதி மாட் ஜின் தெரிவித்தார்.
மாலை 5 மணியளவில் நடந்த இச்சம்பவம், கடன் பிரச்சினை காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
"சம்பவத்திற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர் ஒரு மாணவரைச் சந்திப்பதற்காக MUIP அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஒரு குடிசைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்றடைந்ததும், வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு மாணவர் பாதிக்கப் பட்டவரைத் தள்ளி, குத்தி, உதைத்துள்ளார்.”
“அப்போது அங்கு இருந்த மேலும் சிலரும் சேர்ந்து அந்த மாணவரைத் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை பொதுமக்கள் நேரில் பார்த்ததுடன், ஆதாரத்திற்காக காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர், பாதிக்கப்பட்ட மாணவர் பெக்கான் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார்.
“தகவலின் பேரில், 13 முதல் 16 வயதுக்குட்பட்ட ஆறு மாணவர்கள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பெக்கான் மாவட்ட காவல் தலைமையகத்தில் (IPD) தடுத்து வைக்கப்பட்டனர். விசாரணைக்கு உதவுவதற்காகப் பிடிக்கப்பட்ட அவர்கள், பின்னர் காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர்.”
"இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 147/507 D-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது," என்றார் அவர்.
முன்னதாக, ஒரு பதின்ம வயதுடையவர் மற்றொரு மாணவரைத் தாக்கும் ஒரு நிமிடம் 12 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.
படிவம் ஒன்று மாணவரைத் தாக்கி காயப்படுத்திய கலகம் தொடர்பில் ஆறு மாணவர்கள் கைது
30 ஏப்ரல் 2026, 3:53 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




