‘புடி டீசல்’ (BUDI Diesel) திட்டப் பயனாளிகளுக்கு இன்று முதல் கூடுதலாக ரிம 100 இடைக்கால ரொக்க உதவி 

21 ஏப்ரல் 2026, 10:18 AM
‘புடி டீசல்’ (BUDI Diesel) திட்டப் பயனாளிகளுக்கு இன்று முதல் கூடுதலாக ரிம 100 இடைக்கால ரொக்க உதவி 

ஷா ஆலம், ஏப்ரல் 21: ‘புடி டீசல்’ (BUDI Diesel) திட்டப் பயனாளிகளுக்கு இன்று முதல் கூடுதலாக ரிம 100 இடைக்கால ரொக்க உதவி வழங்கப் படுவதாக நிதி அமைச்சு (MOF) தெரிவித்துள்ளது.

‘புடி தனி நபர்’ (BUDI Individu) மற்றும் ‘புடி அக்ரி-கொமொடிட்டி’ (BUDI Agri-Komoditi) பிரிவுகளின் கீழ் உள்ள பயனாளிகள் இந்த உதவியைப் பெறுவார்கள். இதன் மூலம், மொத்த உதவித்தொகை இனி ரிம 400 ஆக உயர்கிறது.

எரிபொருள் விலை உயர்வால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரை, குறிப்பாக தனிநபர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளில் உள்ள தொழில் முனைவோரைக் இலக்காகக் கொண்டு ‘புடி டீசல்’ முயற்சி அறிமுகப்படுத்தப் பட்டது.

முன்னதாக, டீசல் மானியத்தை மேம்படுத்தும் வகையில், இவ்வுதவித் தொகை இம் மாதத்திற்கு ரிம 300-லிருந்து ரிம 400-ஆக அரசாங்கம் உயர்த்தியிருந்தது.

நிதி அமைச்சின்படி, 'புடி அக்ரி-கொமொடிட்டி' திட்டத்தின் கீழ், 200,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சிறு தோட்டக்காரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் சுமார் ரிம 20 மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், 'புடி டீசல் தனிநபர்' திட்டம் தீபகற்பத்தில் உள்ள சுமார் 150,000 தனிநபர் டீசல் வாகன உரிமையாளர்களுக்குப் பயனளிக்கும். இதற்காக மாதந்தோறும் ரிம 15 மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி, பயனாளிகளின் செயல் பாட்டுச் செலவுகள் மற்றும் தினசரிச் செலவினங்களின் சுமையைக் குறைக்கும் என்று நம்புவதாக அமைச்சு மேலும் கூறியது.

பொதுமக்கள் இந்த உதவி தொடர்பான கூடுதல் தகவல்களை 
budidiesel.gov.my என்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் பெறலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.