கம்போங் காயூ அரா, கம்போங் செம்பாக்கா மற்றும் SS4D உள்ளிட்ட  புயல் மற்றும் திடீர் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் விஜயம்

21 ஏப்ரல் 2026, 10:11 AM
கம்போங் காயூ அரா, கம்போங் செம்பாக்கா மற்றும் SS4D உள்ளிட்ட  புயல் மற்றும் திடீர் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் விஜயம்

ஷா ஆலம், ஏப்ரல் 21: பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர், ஜமாலியா ஜமாலுடின், சமீபத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைப் பார்வையிட களமிறங்கினார்.

இந்த சம்பவத்தால் கம்போங் காயூ அரா, கம்போங் செம்பாக்கா மற்றும் SS4D உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.

தனது சேவை மையக் குழுவினருடன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்குத் தேவையான உதவிகளை அடையாளம் காணும் பணியில் ஈடு பட்டதாக ஜமாலியா கூறினார்.

"நிலைமையை நேரில் கண்டறிந்து, பாதிக்கப் பட்ட ஒவ்வொருவருக்கும் தகுந்த உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் களமிறங்கினோம்," என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து உதவுவதிலும், அவர்களின் நலன் எப்போதும் கவனத்தில் கொள்ளப் படுவதை உறுதி செய்வதிலும் தனது தரப்பு உறுதியாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பொது மக்களும் உதவி பெற பண்டார் உத்தாமா சட்டமன்ற சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக அங்கு செல்லலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.