கோத்தா அங்கேரிக்கில் இந்த ஞாயிறு இலவச சுகாதாரப் பரிசோதனை

21 ஏப்ரல் 2026, 4:38 AM
கோத்தா அங்கேரிக்கில் இந்த ஞாயிறு இலவச சுகாதாரப் பரிசோதனை

ஷா ஆலம், ஏப்ரல் 21: எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி, ஷா ஆலாம், செக்சன் 7, டேவான் மெலாத்தியில் நடைபெறவுள்ள சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் கீழ் பொது மக்கள் இலவச சுகாதாரப் பரிசோதனை செய்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறுகையில், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்தத் திட்டம், நீரிழிவு, புற்றுநோய், கண் மற்றும் பிற தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் கவனம் செலுத்தும் என்றார்.

"பொது மக்கள் செலங்கா (SELangkah) செயலி மூலம் பதிவு செய்ய ஊக்குவிக்கப் படுகிறார்கள். அந்த செயலியில் உள்ள ஆரம்பக்கட்ட கேள்வித்தாள் படிவத்தின் மூலம் தனிநபர்களின் இடர் காரணிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கேற்ற பரிசோதனைகள் வழங்கப்படும்," என்று அவர் தனது முகநூல் அறிக்கையில் தெரிவித்தார்.

செலங்கா செயலி மூலம் பதிவு செய்ய நான்கு எளிய வழிமுறைகள்:

1. செலங்கா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.
2. சிலாங்கூர் சாரிங் பொத்தானை அழுத்தவும்.
3. கேள்வித்தாள் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
4. நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் விவரங்களுக்கு, பங்கேற்பாளர்கள் செல்கேர் (Selcare) ஹோட்லைன் எண்ணான 1-800-22-6600-ஐத் தொடர்பு கொள்ளலாம்.

சிலாங்கூர் சாரிங் திட்டம், குறிப்பாகக் குடும்ப நோய் வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற இடர் காரணிகளைக் கொண்ட தனிநபர்கள், நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற உதவும் மாநில அரசின் ஒரு முன் முயற்சியாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.