கோத்தா பாரு, ஏப்ரல் 18: சில நாடுகள் மற்றும் உலக வல்லரசுகளால் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தாலும், அனைத்துலக மட்டத்தில் உண்மையை எடுத்துரைக்கும் தனது சுதந்திரமான நிலைப்பாட்டில் மலேசியா உறுதியாக உள்ளது.
இந்தத் துணிச்சலான அணுகுமுறை, மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல், குறிப்பாக அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பான மலேசியாவின் நிலைப்பாட்டின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"ஈரான் அதிபர் (மசூத் பெசெஷ்கியன்) உடனான எனது கலந்துரையாடலில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்ததற்கும், ஈரானில் சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதில் வலுவான ஆதரவை வழங்கியதற்கும் மலேசியக் கூட்டரசு அரசாங்கத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்."
"ஈரானின் முக்கிய மத மற்றும் இராணுவத் தலைவர்கள் பலரும், பள்ளி மாணவர்களும் வீரமரணம் அடைந்ததற்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். இதுவே மேற்கத்திய நாடுகளில் நடந்திருந்தால், உலகமே வாரக்கணக்கில், மாதக்கணக்கில் இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பரித்திருக்கும்."
"ஆனால், இது ஒரு இஸ்லாமிய நாட்டின் மீது நிகழ்ந்தபோது, பலரும் மௌனம் காக்கின்றனர். பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டது என்னை மிகவும் பாதித்தது. அந்த மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்தோ அல்லது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்தோ கிட்டத்தட்ட எந்த நாடும் அறிக்கை வெளியிட வில்லை," என்று அவர் இன்று இங்கு சுல்தான் இஸ்மாயில் பெத்ரா விமான நிலையத்தின் (LTSIP) புதிய முனையத் திறப்பு விழாவில் உரையாற்றும்போது கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கிளாந்தான் மந்திரி பெசார் டத்தோ முகமட் நசுருடின் டாட், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உண்மைகளை உலக வல்லரசுகளும் ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், அதனை அனைத்துலக ரீதியில் எடுத்துரைக்க மலேசியா தயங்காது.
18 ஏப்ரல் 2026, 6:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




