ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைய வெளியேற கடல் போக்குவரத்துகளுக்கு அமெரிக்கப் படைகள்  தடை   

14 ஏப்ரல் 2026, 2:43 AM
ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைய வெளியேற கடல் போக்குவரத்துகளுக்கு அமெரிக்கப் படைகள்  தடை   

வாஷிங்டன், ஏப்ரல் 14: ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து கடல் போக்குவரத்துகளுக்கும் அமெரிக்கப் படைகள் திங்கட்கிழமை முதல் தடை விதித்துள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் (AA) தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் பிற பிராந்தியங்களில் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM), வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள ஈரானிய துறைமுகங்களில் நுழையும் அல்லது வெளியேறும் "அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த முற்றுகை சமமாக அமல்படுத்தப்படும்" என்று ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது.

"ஈரானிய துறைமுகங்கள் அல்லாத இடங்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் சுதந்திரமான பயணத்தை CENTCOM படைகள் தடுக்காது," என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.

ஈரானிய துறைமுகங்கள் மீதான இந்தத் தடை, திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு (1400 GMT) அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், வார இறுதியில் பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்த அரிதான நேரடிப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாட்டையும் எட்டாமல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.