ஷா ஆலாம், ஏப். 7: உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும், நாட்டின் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமானதாகவே உள்ளது என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (கேபிடிஎன்) உறுதியளித்துள்ளது.
சமையல் எண்ணெய், கோதுமை மாவு, சீனி மற்றும் எரிபொருள் போன்ற கட்டுப்பாட்டுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, நாடு தழுவிய கண்-காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாக கேபிடிஎன் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள வரைபடத்தில் தெரிவித்துள்ளது.
சந்தையில் மற்ற அடிப்படைப் பொருட்களின் விநியோகமும் சீராகவும் போதுமானதாகவும் இருப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என்றும் அது கூறியது.
அதே வேளையில், வதந்திகளால் பாதிக்கப்பட வேண்டாம் என்றும், நம்பகமான ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறும் நுகர்வோருக்கு நினைவூட்டப் பட்டுள்ளது.
விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பீதி கொள்முதலைத் தவிர்த்து, தேவைக்கேற்ப பொருட்களை வாங்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பொருட்களைப் பதுக்குதல் அல்லது அதிக விலை நிர்ணயித்தல் போன்ற வர்த்தகர்களின் முறைகேடுகள் குறித்து மேலதிக நடவடிக்கைக்காக கேபிடிஎன் KPDN னிடம் புகாரளிக்கலாம்.
தற்போதைய சூழ்நிலையை வர்த்தகர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும், எடை மற்றும் அளவீட்டுக் கருவிகள் முறையாகச் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கேபிடிஎன் நினைவூட்டியது.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமானதாகவே உள்ளது என உள்நாட்டு வர்த்தகம் அமைச்சு (கேபிடிஎன்) உறுதியளித்துள்ளது
7 ஏப்ரல் 2026, 6:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பந்திங், ஶ்ரீ செர்டாங் உட்பட 7 இடங்களில் நாளை மலிவு விற்பனை தொடரும்
Media Selangor Team
29 ஆகஸ்ட் 2026

selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நாளை 6 இடங்களில் தொடரும்
Media Selangor Team
26 ஆகஸ்ட் 2026

selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நாளை 5 இடங்களில் தொடரும்
Media Selangor Team
10 ஆகஸ்ட் 2026

selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நாளை 6 இடங்களில் தொடரும்
Shalini Rajamogun
1 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



