குவாந்தான், ஏப்ரல் 4: ஏழு சக இராணுவ வீரர்களைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் கோப்ரல் ஒருவரின் விளக்கமறியல் உத்தரவை காவல்துறை நீட்டித்துள்ளது. குவாந்தானில் உள்ள 25வது ராயல் மலாய் ரெஜிமென்ட் (RAMD) பட்டாலியன் முகாமில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தண்டனைச் சட்டம் பிரிவு 325-இன் கீழ் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள, சந்தேக நபரின் விளக்கமறியல் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர், சுப்ரிண்டெண்டன்ட் ஜைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.
"விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்தி, மேலதிக நடவடிக்கைகளுக்காக மாநில அரசு வழக்கறிஞர் இயக்குநரிடம் ஒப்படைக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
மார்ச் 30ஆம் தேதி முகாமில் ஏழு இராணுவ வீரர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 37 வயதான சந்தேக நபர் ஏப்ரல் 1 ஆம் தேதி கைது செய்யப் பட்டதாக முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இரவு 8 மணியளவில் முகாம் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலில் 24 வயதான இராணுவ வீரர் ஒருவர் சுயநினைவின்றி இருப்பதாகவும், மேலும் ஆறு சக வீரர்கள் காயமடைந்ததாகவும் ஜைஹாம் குறிப்பிட்டார்.
இதே பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக, சந்தேக நபர் முன்னதாக ஏப்ரல் 1 முதல் 4 வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்தார்.
முன்னதாக, படுகாயமடைந்த வீரரின் நிலைமை இன்னும் சீராகவில்லை என்றும், அவருக்கு தெமர்லோ, சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா மருத்துவமனையில் (HOSHAS) சுவாச உதவி தேவைப்படுவதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் டத்தோ அஸ்ஹான் எம்டி ஒத்மான் தெரிவித்திருந்தார்.
சகா இராணுவ வீரர்களைத் தாக்கிய கோப்ரலின் விளக்கமறியல் உத்தரவை காவல்துறை நீட்டித்துள்ளது
5 ஏப்ரல் 2026, 3:02 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




