இங்குள்ள சுயசேவை சலவையகம் ஒன்றில் பூனைக்குட்டியைத் துன்புறுத்திய ஆடவர் ஒருவரை, சிலாங்கூர் கால்நடை மருத்துவச் சேவைத் துறை (JPV) கைது செய்துள்ளது.
அந்தக் காணொளியில், சம்பந்தப்பட்ட ஆடவர் பூனைக்குட்டியைச் சுவரிலும் மெத்தையிலும் பலமுறை தூக்கி வீசுவது பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் ஷா ஆலம் பகுதியைச் சுற்றியே நடந்ததாக நம்பப்படுகிறது. 59 விநாடிகள் கொண்ட அந்தப் பதிவு நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல் மற்றும் புகார்களின் அடிப்படையில், விலங்கு நல அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 11 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தியதாக சிலாங்கூர் கால்நடை மருத்துவச் சேவைத் துறை தெரிவித்தது.
"சோதனையின் போது, காணொளியில் இடம்பெற்றதாக நம்பப்படும் பூனைக்குட்டி சம்பவ இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது."
"சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 40 வயது மதிக்கத்தக்க ஆடவரும் அவ்விடத்தில் காணப்பட்டார். பின்னர் அவர் மேல் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டார்," என்று அந்தத் துறை ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.
நேற்று அதிகாலை 3.40 மணி முதல் 3.50 மணிக்குள் இச்சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் தற்போது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-இன் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு பூனைக்குட்டி, ஒரு கைபேசி மற்றும் சந்தேக நபருக்குச் சொந்தமானதாக நம்பப்படும் ஒரு தஸ்பீஹ் மணி ஆகியவற்றையும் கால்நடை மருத்துவச் சேவைத் துறை பறிமுதல் செய்துள்ளது.
இந்த வழக்கு 2015ஆம் ஆண்டு விலங்கு நலச் சட்டத்தின் பிரிவு 29(1)(a)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு ரிம 20,000-க்குக் குறையாமலும் ரிம 100,000-க்கு மிகாமலும் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சுயசேவை சலவையகம் ஒன்றில் பூனைக்குட்டியைத் துன்புறுத்திய ஆடவர் ஒருவர் கைது.
4 ஏப்ரல் 2026, 2:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஷா ஆலாமில் பல பகுதிகளில் மின்சாரத் தடை
Media Selangor Team
7 செப்டெம்பர் 2026

national
ஷா ஆலாம், காப்பாரில் அடுத்தடுத்து தீ விபத்துகள்
Media Selangor Team
3 செப்டெம்பர் 2026

national
சாலையில் பட்டாசு வெடித்த சந்தேக நபர்களை ஷா ஆலாம் போலீஸ் தேடுகிறது
Media Selangor Team
26 ஆகஸ்ட் 2026

selangor
மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பயணம்: எல்ஆர்டி3 வசதிகளை மேம்படுத்துகிறது பிரசாரனா
Ufairah Tarmidzi
20 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



