சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியத்துடன் (LPHS) டிரான்ஸ் லோயல் டெவலப்மென்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

2 ஏப்ரல் 2026, 2:42 PM
சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியத்துடன் (LPHS)  டிரான்ஸ் லோயல் டெவலப்மென்ட்  நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

உலு லங்காட் மார்ச் 2: மக்களுக்குத் தரமான மலிவு விலை வீடுகளைப் பெறும் வாய்ப்பை விரிவுபடுத்துவதற்காக, சிலாங்கூர் மாநில அரசாங்கம், அதன் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியம் (LPHS) மூலம், டிரான்ஸ் லோயல் டெவலப்மென்ட் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.

இந்தக் கூட்டாண்மை, 2028-ஆம் ஆண்டுக்குள் 200,000 தரமான மலிவு விலை வீட்டுகளை
வழங்கும் இலக்கை விரைவுபடுத்துவதற்கான ஒரு ஊக்கியாக அமையும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.

"டிரான்ஸ் லோயல் மற்றும் LPHS இணைந்து மொத்தம் 26,405 வீடுகளைக் கட்டுவதற்காக இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழு-த்திட்டதில் நான்
மகிழ்ச்சியடைகிறேன். இது, ரூமா இடாமான் எம்பிஐ மற்றும் ரூமா சிலாங்கூர்கூ ஹராப்பான் வடிவங்களில் வழங்கப்படும் சிலாங்கூர்கூ ஓலியாண்டர் வீடுகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் மற்றொரு வசதியாகும்."

"முதலீட்டாளர்கள் மற்றும் மாநில அரசாங்கத்-தின் முயற்சியுடன் 200,000 மலிவு விலை வீடுகளைக் கட்டும் எங்கள் வாக்குறுதியையும் முயற்சியையும் நிறைவேற்ற நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.

இங்கு நடைபெற்ற ரெசிடென்சி சிலாங்கூர்கூ
ஓலியாண்டர் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அடையாளப்பூர்வ சாவி வழங்கும் விழாவில் உரையாற்றிய அமிருடின், இந்த உத்திப்பூர்வ ஒத்துழைப்பு 'ஸ்மார்ட் சேவா' வாடகைத் திட்டம் (Skim Smart Sewa) மூலம் வீட்டு உரிமையைப் பெறும் வாய்ப்பிலிருந்து எந்தத் தரப்பினரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றார்.

பொருளாதார சவால்கள் மற்றும் தற்போதைய நெருக்கடிகளைத் திறம்பட சமாளிப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசாங்கம் செயல்
படுத்திய புதுமைகள் மற்றும் கொள்கை மாற்றங்களில் இந்தத் திட்டம் ஒன்றாகும் என்றும், இதன் மூலம் மக்கள் சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது என்றும் அவர் விளக்கினார்.

"ஸ்மார்ட் சேவா போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்பு-களையும் நாம் பூர்த்தி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இது போன்ற வீட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் வீடுகளை வாங்க மட்டுமல்லாமல், 'ஸ்மார்ட் சேவா' திட்டத்தின் கீழ் வாடகைக்கு விடுவதற்கும் உதவுகின்றன."

"இங்கு மேற்கொள்ளப்படும் கட்டுமானத்தின் மூலம் மாநில அரசாங்கத்திற்கு மீண்டும் கிடைக்கும் மொத்த மதிப்பு சுமார் 25 மில்லியன் முதல் 26 மில்லியன் ரிங்கிட் ஆகும். 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும், அவற்றை நாங்கள் 'ஸ்மார்ட் சேவா' திட்டத்திற்குப் பயன்படுத்துவோம்."

"இந்தத் திட்டத்தின் கீழ், வாடகைதாரர்கள் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை நிதி சேகரிக்கக் காத்திருப்பார்கள். ஏனெனில், உங்கள் வாடகையில் 30 விழுக்காடு, வீட்டு மேம்பாட்டாளர்கள் கட்டும் மற்ற வீடுகளை வாங்குவதற்காக உங்களுக்குத் திருப்பித் தரப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், டிரான்ஸ் லோயல் டெவலப்மென்ட் செண்டெரியான் பெர்ஹாட் தலைவர் டத்தோ முகமட் அமின் அஹ்மத் அஹ்யா, ரூமா சிலாங்கூர்கு முயற்சியின் மூலம் தங்கள் நிறுவனம் இதுவரை 5,746 மலிவு விலை வீடுகளை
கட்டியுள்ளதாகக் கூறினார்.

"சிலாங்கூரின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத்தின் (PBT) ஒப்புதல் பெற்ற 8,219 ரூமா சிலாங்கூர்கு வீடுகள் கட்டுமானப் பணியிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்," என்றார்.

முன்னதாக, ஒரு வீட்டை 288,800 ரிங்கிட் விலையில் விற்கப்பட்ட ரெசிடென்சி சிலாங்கூர்கூ ஓலியாண்டர் வீடுகளின் 30 வாங்குபவர்களுக்கு அமிருடின் அடையாளப்பூர்வமாகச் சாவிகளை வழங்கினார். ஒவ்வொரு
வீடும் மூன்று படுக்கையறைகள், மூன்று குளியலறைகள், இரண்டு வாகன நிறுத்துமிடங்கள், மூன்று குளிரூட்டிகள், மூன்று சுடுநீர் கருவிகள், குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி மற்றும் ஆயத்த தளவாடங்களுடன் முழுமையாக வழங்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.