ஷா ஆலாம், மார்ச் 30: சிலாங்கூர் பிள்ளைகளு-க்கான உயர் கல்வி நிறுவனப் பரிசுக்கான (HPIPT) விண்ணப்பம் மீண்டும் திறக்கப் பட்டுள்ளது. தகுதி பெறும் மாணவர்களுக்கு ரிம 1,000 உதவி வழங்கப் படும். மாநில அரசால் அங்கீகரிக்கப் பட்ட பல்கலைக் கழகங்களில் முதலாம் ஆண்டு படிப்பைத் தொடரும் மாணவர்களின் நிதிச்சுமையைக் குறைப்பதே இந்த உதவியின் நோக்கம் என்று மாண்புமிகு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
திறன் சான்றிதழ் நிலை 4 (Sijil Kemahiran Tahap 4) முதல் இளங்கலைப் பட்டம் வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவி பொருந்தும் என்று அவர் மேலும் கூறினார். "முந்தைய ரிம 3 மில்லி-யனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மாநில அரசு ரிம 5 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அதிகமான மாணவர்கள் பயனடைவார்-கள்," என்று அவர் முகநூல் வழியாகத் தெரிவித்தார்.
இந்த முயற்சி சிலாங்கூர் பிள்ளைகள் தங்கள் படிப்பை பொருளாதார சங்கடமின்றி தொடர உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, 2026 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது, 2023-இல் இத்திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டதிலிருந்து வழங்கப்பட்டு வந்த ரிம 3 மில்லியன் ஒதுக்கீட்டை ரிம 5 மில்லியனாக உயர்த்துவதாக அமிருடின் அறிவித்தார்.
இந்த முயற்சியின் மூலம், அங்கீகரிக்கப் பட்ட பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பைத் தொடரும் சிலாங்கூர் பிள்ளைகளுக்கு ரிம 1,000 வழங்கப் படும். திறன் சான்றிதழ் நிலை 4, பட்டயம் (diploma) மற்றும் இளங்கலைப் பட்டம் ஆகிய நிலைகளில் உள்ள மாணவர்கள் இந்த உதவிக்குத் தகுதியானவர்கள் என்று அவர் கூறினார்.








