ஷா ஆலாம்: பந்திங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 650 பேர் 'ஜோம் ஷாப்பிங் நோன்புப் பெருநாள்' திட்டத்தின் கீழ் பற்றுச்சீட்டுகளைப் பெற்றனர்.
அதன் சட்டமன்ற உறுப்பினர் வி. பப்பாராய்டு வீரமன் கூறுகையில், இந்த பற்றுச்சீட்டு விநியோகத்திற்காக பந்திங் எக்கோன்சேவ் பேரங்காடியில் ரிம 130,000 ஒதுக்கப் பட்டதாகக் குறிப்பிட்டார்.
"தேவைப்படும் குழுவினர் நோன்புப் பெரு நாளைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடுகளைச் செய்ய உதவும் முயற்சியாக, இந்த ஆண்டும் பந்திங் சட்டமன்றத் தொகுதியின் ஜோம் ஷாப்பிங் நோன்புப் பெருநாள் திட்டம் தொடர்கிறது."
"பயனாளிகள் 650 பேர், ஒவ்வொருவரும் தங்களின் செலவினச் சுமையைக் குறைக்கும் வகையில் ரிம 200 மதிப்புள்ள பற்றுச் சீட்டைப் பெற்றுள்ளனர்," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, மாநில வறுமை ஒழிப்பு ஆட்சிக் குழு உறுப்பினருமான பப்பாராய்டு, இந்த ஆண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு தகுதியான பயனாளிகளுக்கு மொத்தம் 38,400 ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் என்றும், இதற்காக ரிம7.68 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இலக்குக் குழுவினர் பண்டிகையை முன்னிட்டுத் தயாராவதற்கு உதவும் வகையில், சிலாங்கூர் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், இஸ்லாமியர்கள் பெருநாளுக்கு தயாராவதற்கு, பொருட்கள் வாங்குவதற்கும் அதிக அவகாசம் வழங்கும் நோக்கில், பற்றுச்சீட்டுகள் பயன்படுத்துவதற்கான காலக்கெடு அசல் தேதியான மார்ச் 18-இலிருந்து மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வும் அவர் குறிப்பிட்டார்.
பந்திங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 650 குடும்பங்களுக்கு ரிம 200 நோன்புப் பெருநாள் பற்றுச்சீட்டு
11 மார்ச் 2026, 4:26 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
'ஜோம் ஷோப்பிங் ஐடில்ஃபித்ரி' : 40,000-க்கும் மேற்பட்டோருக்கு வவுச்சர்கள் விநியோகம்
Shalini Rajamogun
13 மார்ச் 2026

selangor
கோலா லங்காட் நகராட்சி மன்றம், பந்திங்-கிள்ளான் சாலையில் சட்டவிரோத குப்பைகளை அகற்றும் நடவடிக்கை.
Pakiya
1 ஏப்ரல் 2026

national
உடல், மன மற்றும் உணர்ச்சி நலனை கவனத்தில் கொண்டு சிலாங்கூர் புதிய பராமரிப்புத் தொகுதியை உருவாக்குகிறது
Pakiya
1 ஏப்ரல் 2026

national
உயிரைப் பறிக்கும் அளவில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் அரசு வலியுறுத்து
Shalini Rajamogun
31 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




