இந்துக்களின் வழிப்பாட்டு தலங்கள் குறித்த வட்டமேசை கலந்துரையாடல்; இந்திய அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்தனர்

26 பிப்ரவரி 2026, 3:17 AM
இந்துக்களின் வழிப்பாட்டு தலங்கள் குறித்த வட்டமேசை கலந்துரையாடல்; இந்திய அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்தனர்

கோலாலம்பூர், பிப் 26- இந்திய சமூகம் மற்றும் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான நிலப் பதிவு மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்த முக்கிய வட்டமேசை கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த அர்த்தமுள்ள சந்திப்பை முன்னின்று ஏற்பாடு செய்த சட்டத் துறை துணை அமைச்சருக்குப் பாராட்டுக்களும் மனமார்ந்த நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நிர்வாகம், சட்டம் மற்றும் சமூக நலன் சார்ந்த சிக்கல்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் காண்பதற்கு இந்தக் கலந்துரையாடல் ஒரு சிறந்த தளமாக அமைந்தது.

சட்ட ரீதியான சவால்களைக் களைந்து சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

வழிபாட்டுத் தலங்களின் நில உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நிர்வாக ரீதியான தடைகளைத் தகர்ப்பதற்கும் இந்த முயற்சி ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

அனைத்துப் தரப்பினருக்கும் இடையிலான நீதி, நல்லிணக்கம் மற்றும் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு இந்த முன்னெடுப்பு ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான், செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ், சட்ட மற்றும் கழக சீர்த்திருத்த பிரதமர் துறை துணையமைச்சர் எம். குலசேகரன் மற்றும் பிற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ரவாங் ஆலய இடிப்பு சம்பவம்; சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

Mavitthran
12 பிப்ரவரி 2026
ரவாங் ஆலய இடிப்பு சம்பவம்; சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

ரவாங் பெர்டானாவில் ஆலயக் கட்டிடம் இடிப்பு; முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்- மாண்புமிகு பாப்பாராய்டு  அறிக்கை 

Mavitthran
12 பிப்ரவரி 2026
ரவாங் பெர்டானாவில் ஆலயக் கட்டிடம் இடிப்பு; முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்- மாண்புமிகு பாப்பாராய்டு  அறிக்கை 

வழிப்பாட்டு தலங்களைக் கட்டுவதற்கான சட்டத்திட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்- மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை

Mavitthran
11 பிப்ரவரி 2026
வழிப்பாட்டு தலங்களைக் கட்டுவதற்கான சட்டத்திட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்- மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை

இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்குச் சிறப்பு பதிவாளர் நடைமுறைக்குத் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆதரவு- ஆர். யுனேஸ்வரன் தகவல் 

Mavitthran
5 மார்ச் 2026
இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்குச் சிறப்பு பதிவாளர் நடைமுறைக்குத் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆதரவு-  ஆர். யுனேஸ்வரன் தகவல் 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.