மோட்டார் சைக்கிள் திருடிய வெளிநாட்டவர் கைது, போதைப்பொருள் சோதனையில் நேர்மறை முடிவு

31 மார்ச் 2026, 9:15 AM
மோட்டார் சைக்கிள் திருடிய வெளிநாட்டவர் கைது, போதைப்பொருள் சோதனையில் நேர்மறை முடிவு

ஷா ஆலம், மார்ச் 31: நேற்று, தெற்கு கிள்ளானில் உள்ள பண்டமாரான் இண்டா பெட்ரோல் நிலையப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியதாக சந்தேகிக்கப்பட்ட வெளிநாட்டு ஆடவர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அப்பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவு (MPV) இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைமையகம் (IPD) தெரிவித்தது.

38 வயதான அந்த சந்தேக நபர், பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்தபோது தடுத்து வைக்கப்பட்டார்.

"மேற்கொண்ட சோதனையில், அந்த மோட்டார் சைக்கிள் கிள்ளான் துறைமுகத்தில் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது," என்று முகநூல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவில், சந்தேக நபர் மெத்தம்பெட்டமைன் வகை போதைப்பொருளை உட்கொண்டிருந்தது உறுதியானது."

வாகனம் திருடிய குற்றத்திற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 379A-இன் கீழும், உடலில் போதைப்பொருளைச் செலுத்தியதற்காக அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952, பிரிவு 15(1)(a)-இன் கீழும் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

பொதுமக்கள் தங்கள் உடமைகளின் பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்யுமாறும், குற்றச் செயல்கள் குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.