ஈப்போ மருத்துவமனை இதயநோய் நிபுணர் குழு மீண்டும் சாதனை, ஏசிசி உலக சாம்பியனானது

31 மார்ச் 2026, 4:41 AM
ஈப்போ மருத்துவமனை இதயநோய் நிபுணர் குழு மீண்டும் சாதனை, ஏசிசி உலக சாம்பியனானது

கோலாலம்பூர், மார்ச் 31: நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி மாநாடு (ACC) 2026-இன் போது நடத்தப்பட்ட ஃபெலோஸ்-இன்-டிரெய்னிங் (FITs) ஜெப்பர்டி போட்டியில் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் (HRPB) இதயநோய் நிபுணர் குழு உலக சாம்பியன் பட்டத்தை வென்று மீண்டும் மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

டாக்டர் சென் டாய் மெங், டாக்டர் ஆங் ஜியான்-காங் மற்றும் டாக்டர் யீ ஷென் யியூ ஆகிய மூன்று இளம் நிபுணர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி சாத்தியமானது. அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த போட்டியாளர்களைத் தோற்கடித்து வெற்றிக் வாகை சூடினர்.

இந்த மதிப்புமிக்க சாதனை, மலேசிய மருத்துவ நிபுணர்களின் திறமை அனைத்துலக அளவில் சிறந்தவர்களுக்கு இணையாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்
ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

"இதயநோய் துறையின் தலைவர் டாக்டர் நூர் ஹனிம் முகமது அமின் மற்றும் HRPB-யின் முழு இதயநோய் நிபுணர் குழுவிற்கும் அவர்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவான ஆதரவிற்காகப் பாராட்டுகள்," என்று அவர் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

"2024-ஆம் ஆண்டில் மலேசிய தேசிய இருதய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான போட்டியிலும், 2025-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஏசிசி ஆசியா வட்டார அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இது ஒரு அசாதாரணமான 'ஹாட்ரிக்' வெற்றியாகும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 28 முதல் 30 வரை நடைபெற்ற FITs ஜெப்பர்டி, இதயநோய் பயிற்சி மருத்துவர்களுக்கு அறிவுத்திறனைக் கூர்மைப்படுத்தவும், உலகளாவிய தொழில்முறை வலையமைப்பை உருவாக்கவும் வினாடி வினா, போட்டி மற்றும் கல்வி ஆகிய கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு மதிப்புமிக்க ஊடாடும் கற்றல் தளமாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.