ஷ மலாய் மொழிக்கு மொழி பெயர்க்க, சுவாரசியமான மற்றும் பயனுள்ள புத்தகத் தலைப்புகளைப் பரிந்துரைக்க பொது மக்களுக்கு டாருல் ஏசான் புத்தக முன் முயற்சி (IBDE) வாய்ப்பளிக்கிறது. பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம், பரிந்துரைக்கப் படும் புத்தகம் முறையான பதிப்புரிமையைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது பொதுக் களத்தில் இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை IBDE கோடிட்டுக் காட்டியுள்ளது.
"பரிந்துரைக்கப்படும் தலைப்பு பயனுள்ளதாக, உயர் அறிவு மதிப்பைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அரசியல், வரலாறு, தத்துவம் இலக்கியம், கலாச்சாரம், அறிவியல் போன்ற பிற வகைகளையும் தேர்ந்தெடுக்கலாம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள், சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பங்கேற்பு படிவத்திற்கான இணைப்பைப் பெறலாம்.முன்னதாக, மசூதிகளில் கித்தாப் ஆய்வுப் பாரம்பரியத்தை புத்துயிர் அளிக்கும் முயற்சியாக, நான்கு மத்ஹப்களின் நிறுவன-ர்கள் உட்பட இஸ்லாமிய பிரமுகர்களின் கித்தாப்களை மொழிபெயர்த்துள்ளதாக IBDE தலைமை நிர்வாக அதிகாரி ஃபர்ஹான் அஃபாண்டி கூறியிருந்தார்.
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில் ஷாஃபி, மாலிகி, ஹம்பலி மற்றும் ஹனாஃபி ஆகிய நான்கு இமாம்களின் வாழ்க்கை வரலாறுகள், சையிதினா அலி அபி தாலிப் மற்றும் இப்னு அதாயில்லா அஸ்-சகந்தரியின் அல்-ஹிகாம் கித்தாப் ஆகியவை அடங்கும். இந்த மொழி பெயர்க்கப்பட்ட சில படைப்புகள் இந்த ஆண்டு சிலாங்கூர் இஸ்லாமிய பாரம்பரிய விழாவில் (FTIS) பயன்படுத்தப்படும் என்றும் ஃபர்ஹான் தெரிவித்தார்.
மாநில அரசாங்கத்திடமிருந்து மானியம் பெறும் IBDE, வரலாறு, தத்துவம், மதம் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரிய நூல்கள் உட்பட பல்வேறு வகைகளின் மொழி பெயர்ப்புப் புத்தகங்களை தீவிரமாக வெளியிட்டு வருகிறது. IBDE-இன் வெளியீடுகள், சில மீடியா சிலாங்கூருடன் இணைந்து தயாரிக்கப் பட்டவை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ டாமன்சாராவில் உள்ள கெடாய் புக்கு ரெஞ்சானாவில் அல்லது bukuibde.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பெறலாம்.




