பாங்காக், மார்ச் 27: பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பீதி கொள்முதல் காரணமாக உண்டான எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுல் அவசரகால நடவடிக்கைகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சருமான அனுதின், அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களை நிலைமையைத் தீவிரமாகக் கண்காணிக்கவும், ஏதேனும் அசாதாரணச் செயல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் பணித்துள்ளார்.
"அதிகப்படியான லாபம் ஈட்டுதல், பதுக்கல், மிதமிஞ்சிய விலை நிர்ணயம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மாநில ஆளுநர்களுடனான கூட்டத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
திறமையான தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அனைத்து மட்டங்களிலும் உள்ள முகமைகள் பொதுமக்களுக்குத் மற்றும் தொடர்ச்சியான தகவல்களை வழங்குமாறும், எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கு மாறும் கேட்டுக்கொண்டார்.
சாதாரண சூழ்நிலையில், தாய்லாந்தின் தினசரி எரிபொருள் தேவை சுமார் 67 மில்லியன் லிட்டராக உள்ளது, அதே நேரத்தில் உள்நாட்டு சுத்திகரிப்பு ஆலைகள் ஒரு நாளைக்கு சுமார் 77 மில்லியன் லிட்டரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளன.
இது விநியோகம் போதுமானதாக இருப்பதைக் காட்டுகிறது என்று அனுதின் விளக்கினார். "இருப்பினும், தற்போதைய சூழ்நிலை காரணமாக, தேவை ஒரு நாளைக்கு 87 மில்லியன் லிட்டராக உயர்ந்துள்ளது, இது உள்நாட்டு உற்பத்தித் திறனை விட மிக அதிகம்," என்று அவர் கூறினார்.
விநியோகப் பற்றாக்குறையைத் தவிர்க்கவும், அனைத்து மாநிலங்களிலும் போதுமான விநியோகத்தை உறுதி செய்யவும், அரசாங்கம் விலைக் கட்டுப்பாடுகளை நீக்கி, சந்தை முறைக்கு ஏற்ப எரிபொருள் விலையைச் சரிசெய்ததற்கு இதுவே முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
"எரிசக்திப் பாதுகாப்பைப் பராமரித்தல், பொருட்களின் விலையை நிர்வகித்தல், மற்றும் மக்கள் மற்றும் வணிகங்களின் சுமையைக் குறைக்க நிதிக் கொள்கைகளைச் செயல் படுத்துதல் ஆகிய 3 முக்கிய நோக்கங்களில் கவனம் செலுத்துவதன் வழி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதும், தாக்கத்தை முடிந்தவரை குறைப்பதும் அரசாங்கத்தின் பணியாகும்," என்று அவர் கூறினார்.
வியாழக்கிழமை, மானியக் குறைப்பைத் தொடர்ந்து தாய்லாந்தில் அனைத்து வகை எரிபொருட்களின் விலையும் லிட்டருக்கு ஆறு பாட் (RM0.73) அதிகரித்தது.வெள்ளிக்கிழமை பாங்சாக் கார்ப்பரேஷன் பெட்ரோல் நிலையத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், Gasohol 95 ஒரு லிட்டர் 41.05 பாட் (RM5.00), Gasohol 91 ஒரு லிட்டர் 40.68 பாட் (RM4.96) மற்றும் டீசல் B7 ஒரு லிட்டர் 38.94 பாட் (RM4.75) என்ற விலையில் விற்கப்பட்டது,




