19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதா? கூற்றை பெர்ஹிலித்தான் மறுப்பு

28 மார்ச் 2026, 6:38 AM
19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதா? கூற்றை  பெர்ஹிலித்தான் மறுப்பு

புத்ராஜெயா, 27 மார்ச்: 19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுவதை பெர்ஹிலித்தான் மறுப்பு; அவைகளின் இடமாற்றம் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே வனவிலங்குகளை, தேசிய வன விலங்கு பூங்கா பாதுகாப்புத் துறை (பெர்ஹிலித்தான்) மேற்கொள்ளும் என உறுதிப்படுத்தினார்.

19 யானைகளை குறிப்பிட்ட தரப்பினருக்கு விற்பனை செய்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டவை.பெர்ஹிலித்தான் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காடிர் அபு ஹாஷிம் கூறினார்.

அந்த யானைகள் விற்கப்படவில்லை, மாறாக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான மேலாண்மை நோக்கங்களு-க்காக கடனாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளன என்றார்.

"இடமாற்றத் திட்டங்கள், வனவிலங்குகளின் வாழ்விடங்களில் ஏதேனும் நோய் பரவல் அல்லது பேரழிவுகள் ஏற்பட்டால், அவற்றின் இனங்கள் அழிந்து போகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும்,மற்றும் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்களைக் குறைப்பதற்கும், தொடர்புடைய தரப்பினருடன் ஒத்துழைப்பதன் மூலம் பாதுகாப்புத் திட்டங்களை வலுப் படுத்தவும் துறையின் ஒரு மூலோபாய முயற்சியாகும்."

"தொற்று நோய்கள், வாழ்விட அழிவு அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற எதிர்பாராத காரணிகளால் பெரிய அளவிலான இன அழிவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, சில யானைகளை வெவ்வேறு இடங்களில் குடியமர்த்துவது ஒரு 'காப்பீட்டு எண்ணிக்கை' உத்திகளில் இந்த அணுகுமுறை முக்கியமானது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

இந்த ஒத்துழைப்பு, கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்கம், சுகாதார கண்காணிப்பு, ஊட்டச்சத்து மற்றும் நவீன வாழ்விட மேலாண்மை போன்ற துறைகளில் தொழில் நுட்பம் மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றத்திற்கான வாய்ப்புகளையும் திறக்கிறது என்று அவர் கூறினார்.

"இது யானை இனங்களின் பாதுகாப்பு முயற்சிகளை மிகவும் பயனுள்ள மற்றும் நிலையான முறையில் நேரடியாக ஆதரிக்கிறது."இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து யானைகளும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு (NRES) மற்றும் பெர்ஹிலித்தானின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து இருக்கும். இதில் மேலாண்மை பதிவுகள், சுகாதார கண்காணிப்பு மற்றும் யானைகளைப் பெறும் தரப்பினரிடமிருந்து பெறப்படும் காலமுறை அறிக்கைகளும் அடங்கும்," என்று அவர் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு முயற்சிகள் குறித்து குழப்பத்தையும் எதிர்மறையான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தக் கூடிய சரிபார்க்கப் படாத தகவல்களின் பரவலை தனது துறை தீவிரமாக கருதுவதாக அவர் கூறினார்.

"தவறான தகவல்களைப் பரப்பும் எந்த ஒரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப் படலாம்.""பொதுமக்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், உண்மையான தகவல்களைப் பெற NRES மற்றும் பெர்ஹிலித்தானின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.