சுங்கை பூலோ மருத்துவமனையின் ஆபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் (ETD) மேற்கொள்ளப் பட்ட வசதி மற்றும் சேவை தர மேம்பாடுகள் வெற்றி-அமைச்சர்

23 மார்ச் 2026, 11:32 AM
சுங்கை பூலோ மருத்துவமனையின் ஆபத்து அவசர  சிகிச்சைப் பிரிவில் (ETD) மேற்கொள்ளப் பட்ட  வசதி மற்றும் சேவை தர மேம்பாடுகள் வெற்றி-அமைச்சர்

சுங்கை பூலோ மருத்துவமனையின் ஆபத்து அவசர  சிகிச்சைப் பிரிவில் (ETD) மேற் கொள்ளப்பட்ட மாற்றங்கள், வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தியதன் விளைவாக, நோயாளிகளின் அனுபவத்தை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியுள்ளது.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்  ஜூல்கிப்ளி அகமது  இது குறித்து கூறுகையில், மிகவும் வசதியான 'டிஸ்சார்ஜ் லவுஞ்ச்' (Discharge Lounge) மற்றும் நோயாளிக்கு உகந்ததாக மேம்படுத்தப் பட்ட பசுமை மண்டல பதிவு கவுண்டர் ஆகியவை முக்கிய மேம் பாடுகளில் அடங்கும் என்றார்.

அமைச்சர், இந்த முயற்சிகள் நோயாளிகளின் அலுவல்களை எளிதாக்கியதோடன்றி, சுகாதாரப் பணியாளர்களின் பணி ஓட்டத்தையும் மேம்படுத்தியுள்ளது.

"இதன் விளைவாக, நோயாளிகளின் திருப்தி நிலை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. கூகள் மதிப்பீடு மூன்று மாதங்களுக்குள் சராசரியாக 3.0-லிருந்து 4.7 ஆக உயர்ந்துள்ளது," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

சேவையின் தரத்தை உயர்த்துவதில் அர்ப்பணி-ப்புடன் செயல்பட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு குழுவினருக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், நாடு முழுவதிலும் உள்ள சுகாதார மையங்களில் நோயாளிகளின் அனுபவத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்து-வதில் உயர் அர்ப்பணிப்பைக் காட்டிய சுங்கை பூலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.